அடிப்படை வசதி கோரி சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
Madras University students protest for basic facilities
-
சென்னை பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, மெரினா வளாகத்தில் மாணவர்கள் போராட்டம்
-
மாணவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி
சென்னை, ஏப் .05
அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி துணைவேந்தர் அறையை முற்றுகையிட்டு சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்கள் போராட்டம்
சென்னை பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, மெரினா வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். துறை வாரியாக குடிநீர் வசதி, இரவு 9 மணிக்குள் விடுதிக்கு வர வேண்டும் என்று நிபந்தனையை கைவிட வேண்டும், மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் காலை முதல் வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதையும் படியுங்கள் :
இதனைத்தொடர்ந்து துணை வேந்தர் அறையை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், துணைவேந்தர் எழுத்துபூர்வ உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.