
மதுரை நீதிமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழா; முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு
madurai court building foundation laying ceremony; chief minister mk stalin participation
-
மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் கட்டிடத்திற்கான ரூ.166 கோடியில் கட்டப்படவுள்ள புதிய நீதிமன்ற கட்டிடத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடிக்கல் நாட்டினார்
-
மதுரையில் நீதிமன்ற கட்டிட அடிக்கல் விழா இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்றுள்ளார். அதேபோல் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம் மற்றும் செசன்ஸ் கோர்ட்டுகளை தொடங்கி வைத்துள்ளார்.
மதுரை, மார்ச்.25
மதுரையில் நீதிமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆடம்பரமில்லாத வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அதேபோல் ஸ்டாலினை வரவேற்று மதுரை மாநகரில் விளம்பர பேனர்கள் வைக்கப்படுவதும் இந்த முறை தவிர்க்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் பேனர் தொடர்பாக அண்மையில் ஆர்.எஸ்.பாரதி கடுமையான முறையில் விடுத்த அறிவுறுத்தலே ஆகும்.
மதுரையில் நீதிமன்ற கட்டிட அடிக்கல் விழா உள்ளிட்ட இன்னும் பல அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரை வந்தார்.
அங்கு அவருக்கு அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், ராஜகண்ணப்பன், கே.ஆர்.பெரியகருப்பன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து கார் ஏற வந்த அவருக்கு அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் ளையும், பொன்னாடைகளையும் பரிசாக அளித்தனர்

பொன்னாடைகளை பரிசாக அளிப்பதற்கு பதில் புத்தகங்களை கொடுங்கள் என ஒரு முறை, இரு முறை அல்ல பல முறை அறிவுறுத்தியும் அதை மட்டும் யாரும் கேட்பதாக தெரியவில்லை.
இதையும் படியுங்கள் : மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு பயண அட்டை அவசியம்
ஆடம்பர வரவேற்புகளை தவிர்க்க வேண்டும், விளம்பர பேனர்கள் வைக்கக் கூடாது என மிகக் கடுமையான முறையில் ஆர்.எஸ்.பாரதி அண்மையில் வெளியிட்ட அறிவிப்பால், இந்த முறை ஆரவாரமின்றி முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுத்தார் அமைச்சர் மூர்த்தி.
அதேபோல் பெரியளவில் கட்சியினரை கொண்டு வந்து விமான நிலையத்தில் குவிக்கவில்லை. அப்படியிருந்தும் மதுரை தெற்கு, மதுரை வடக்கு, மதுரை மத்திய மாவட்டங்களை சேர்ந்த திமுக நிர்வாகிகள் அவரவராக திரளான எண்ணிக்கையில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க வந்திருந்தனர்.
தன்னை வரவேற்க வந்தவர்கள் அனைவரையும் சந்தித்து அவர்கள் கொடுத்த பரிசுப் பொருட்களை வாங்கிய பின்னரே காரில் ஏறினார் முதல்வர் ஸ்டாலின்.
அதேபோல் ஸ்டாலினை வரவேற்று மதுரை மாநகரில் விளம்பர பேனர்கள் வைக்கப்படுவதும் இந்த முறை தவிர்க்கப்பட்டுள்ளது.
பேனர்கள் வைக்கிறேன் என்ற பெயரில் யாரும் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம் என கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர் மூர்த்தி ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தாராம்.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் கட்டிடத்திற்கான ரூ.166 கோடியில் கட்டப்படவுள்ள புதிய நீதிமன்ற கட்டிடத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடிக்கல் நாட்டினார்

மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டுகள் தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சி மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்றுள்ளார். அதேபோல் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம் மற்றும் செசன்ஸ் கோர்ட்டுகளை தொடங்கி வைத்துள்ளார்.
அதேபோல் மயிலாடுதுறை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிர்வாக நீதிபதி ஆர்,சுப்பிரமணியன், நீதிபதி மகாதேவன், அமைச்சர்கள் ரகுபதி, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று இரவு விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார்.
கோவிலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பூரண கும்ப மரியாதை அளித்து, வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தரிசனம் செய்தபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக பக்தர்கள் அந்த நேரத்தில் மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் இரவில் அவர், கோச்சடை பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கினார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.