வேலை வாய்ப்புத்திறன்கள் பாடத்தில் மதுரை கே. புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை
Employability Skills Course, Madurai k.pudur Al-Amin Secondary School Student Achievement
-
மாணவர்கள் ஆங்கில மொழித்திறன்கள், தகவல் தொடர்புத்திறன்கள், மின்னனு திறன்கள், தொழில் முனைவு போன்ற திறன்களை வளர்க்க, 11-ம் வகுப்பில் வேலை வாய்ப்புத் திறன்கள் (Employability Skills) புதிய பாட திட்டம் அறிமுகம்
-
மதுரை கே. புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர் எம். மாதவன் 100 / 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை
மதுரை, மே. 20
வேலை வாய்ப்புத்திறன்கள் பாடப்பிரிவில் மதுரை கே. புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவன் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற சாதனைபடைத்துள்ளான்.
பள்ளி மாணவர்கள் தங்களைப் புரிந்து கொண்டு, ஆங்கில மொழித்திறன்கள், தகவல் தொடர்புத்திறன்கள், மின்னனு திறன்கள், தொழில் முனைவு, நிதி கல்வியறிவு போன்ற 21 ஆம் நூற்றாண்டிற்கான திறன்களை வளர்த்து, வேலை வாய்ப்பு சார்ந்த உலகத்திற்கு மாணவர்களை தயார் ஆக்குவதற்காக 11-ம் வகுப்பில் வேலை வாய்ப்புத் திறன்கள் (Employability Skills) என்ற புதிய பாட திட்டத்தை 2022-2023 -ம் கல்வியாண்டில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது.
இதையும் படியுங்கள் : கர்நாடக முதல் அமைச்சராக வரும் 20 ம் தேதி பதவி ஏற்கிறார் சித்தராமையா
இதனிடையே 11-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 19-05-2023 அன்று வெளியானது. இதில் மதுரை கே. புதூர் அல்-அமீன் மேல் நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பில் தொழிற்கல்வி பிரிவில் வேலைவாய்ப்புத்திறன்கள் (Employability Skills) பாடத்தில் மாணவர் எம். மாதவன் 100 / 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாணவர் எம். மாதவன், மதுரை நாயக்கன்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளிகளான முத்து-தொட்டிச்சி தம்பதிகளின் மகனாவார்.
சாதனை படைத்த மாணவர் மாதவனை பள்ளி நிர்வாகிகள், பள்ளித் தலைமையாசிரியர் ஷேக் நபி, ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பாராட்டினர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.