-
கண் மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர் ஆகியோர் முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை
-
கண் மற்றும் பல் மருத்துவம் சம்பந்தமான குறைபாடு உள்ள மாணவர்களுக்கு மருத்துவர்களால் பரிசோதனை, ஆலோசனை
மதுரை, மார்ச் 06
மதுரை கோ.புதூர் அல்- அமீன் மேல்நிலைப்பள்ளியில் மதுரை மேற்கு ரோட்டரி கிளப் சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம் மருத்துவ முகாமிற்கு பள்ளித்தலைமையாசிரியர் ஷேக் நபி தலைமை தாங்கினார். ரோட்டரி கிளப்பின் தலைவர் ராமநாதன், செயலாளர் பொன்குமார், பிரசிடெண்ட் எலக்ட் ஹனீப்தயூப், முன்னாள் தலைவர் குர்ஷித் மஜீத், மோகன் மற்றும் நலத்திட்ட ஒருங்கிணைப்பாளரும் பொது மருத்துவம் மற்றும் குழந்தையின்மை சிறப்பு மருத்துவர் மைதிலி பாண்டியன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உடல் நலம் சார்ந்த கருத்துகள் குறித்து சிறப்புரையாற்றினர்.
இதையும் படியுங்கள் : நாகர்கோவிலில் மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
கண்மருத்துவர்கள் சோலைராஜா, சரவணன், ரூபிகா மற்றும் பல் மருத்துவர் உத்தண்ட ஹரிஹரசுதன், செவிலியர் வினோதா முதலானோர் மருத்துவமுகாமில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை அளித்தனர்.
இம்முகாமில் 650 பள்ளிமாணவர்களும், ஆசிரியர்கள் அலுவலர்களும் பயன்பெற்றனர்.
கண் மற்றும் பல் மருத்துவம் சம்பந்தமான குறைபாடு உள்ள மாணவர்களுக்கு மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இம் மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.