
மகளிர் உரிமைத் தொகை | காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
magalir urimai thogai | Chief Minister M. K. Stalin inaugurates in Kanchipuram
-
பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பார்வையிட்டு ஆய்வு
-
பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
காஞ்சிபுரம், செப். 10
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மகளிர் உரிமைத் தொகை
இந்த திட்ட தொடக்க விழாவுக்கான பந்தல் மற்றும் விழா மேடை அமைக்கும் பணிகள் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
இதையும் படியுங்கள் : ஆந்திர எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கைது
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுப் பணித்துறையினரால் மேற்கொள்ளப்படும் பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பொதுப்பணித் துறை ஆய்வு
மேலும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் செல்வகுமார், மாநகராட்சி ஆணையர் கண்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.