
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் : பணியாளர் அட்டையுடன் ஆதார் எண்
இணைந்திருந்தால் மட்டுமே சம்பளம் பட்டுவாடா
Mahatma Gandhi Rural Employment Scheme : Linking Aadhaar number with the employee card is must for salary
-
ஆதார் எண்ணை இணைப்பதற்காக இறுதிகட்ட கால அவகாசம் நேற்றுடன் நிறைவு.
-
தற்போது கொண்டு வரப் பட்ட இந்த திட்டத்தின்படி பதிவு செய்து இருந்த 25.25 கோடி தொழிலாளர்களில் 14.35 கோடி பேர் மட்டுமே தகுதியானவர்களாக கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை , ஜன. 01
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளார்கள். இந்த வேலை வழங்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்தவும் முறைகேடுகளை தவிர்க்கவும் ஆதார் இணைப்பு அவசியம் என்றும் அதன் அடிப்படையிலேயே சம்பளம் வழங்கும் முறையை கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.
கால அவகாச நீட்டிப்பு கிடையாது
வேலை திட்ட அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக கடந்த ஆண்டில் 5 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இறுதிகட்ட கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதற்கு மேல் கால அவகாச நீட்டிப்பு கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த 3 ஆண்டுகளில் ஒரு நாளாவது வேலை பார்த்து இருந்தாலே அவர்கள் பணியில் இருக்கும் தொழிலாளர்களாகவே கருதப்படுவார்கள். தற்போது கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தின்படி பதிவு செய்து இருந்த 25.25 கோடி தொழிலாளர்களில் 14.35 கோடி பேர் மட்டுமே தகுதியானவர்களாக கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : இஸ்ரோ எக்ஸ்போசாட்(XPoSat) செயற்கைக் கோளை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளது
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியிருந்த சுற்றறிக்கையில் தகுதியான காரணங்களால் பதிவு செய்ய இயலாமல் போனவர்கள் மீண்டும் சேர்க்கலாம் என்று அறிவித்துள்ளது.
வங்கி கணக்குடன் இணை
கடந்த 21 மாதத்தில் 7.6 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. வேலைக்கான அட்டையுடன் ஆதார் கார்டு இணைத்துவிட்டால் அது வங்கி கணக்குடன் இணைந்து இருக்கும். அத்துடன் நிதி வழங்கும் துறையுடனும் இணைக்கப்பட்டிருக்கும்.
இதன் மூலம் தொழிலாளர்களுக்கு விரைவாக சம்பள பட்டுவாடா செய்ய முடியும். வேலை செய்யாமலேயே ஆட்களின் பெயரை எழுதி பணத்தை சுரண்டுவதும் தடுக்கப்படும்.
இன்று முதல் ஆதார் அட்டையை பணியாளர் அட்டையுடன் இணைத்திருப்பதன் அடிப்படையிலேயே சம்பளம் பட்டுவாடா செய்யப்படும்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்