Home இந்தியா மணிப்பூர் வன்முறை : ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் 40 பேர் சுட்டுக் கொலை

மணிப்பூர் வன்முறை : ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் 40 பேர் சுட்டுக் கொலை

0
மணிப்பூர் வன்முறை : ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் 40 பேர் சுட்டுக் கொலை

மணிப்பூர் வன்முறை : ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் 40 பேர் சுட்டுக் கொலை

manipur violence : 40 people shot dead by armed intruders

  • மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து தீவிர பணியில் இந்திய ராணுவம்

  • பாதுகாப்புப் படையினருக்கும், ஆயுதமேந்திய பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை

இம்பால், மே. 29

மணிப்பூர் முதல் மந்திரி பிரேன் சிங், இம்பால் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வன்முறை சம்பவங்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்திய நபர்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில், ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதையும் படியுங்கள்அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக வருமான வரி சோதனை ; ரூ.3.50 கோடி ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் 

இந்திய ராணுவம் நடவடிக்கை

கடந்த 3-ம் தேதி மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, இந்திய ராணுவம் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதில், பாதுகாப்புப் படையினருக்கும், ஆயுதமேந்திய பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. மக்கள் சமூகத்தினர் இடையே இல்லை.

அதனால், மக்கள் அமைதி காக்க வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதற்காக ஹெலிகாப்டர் உதவியுடன் வான்வழி கண்காணிப்பு பணியும் நடந்து வருகிறது என தெரிவித்தார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.