
Martyrs’ Day : Chief Minister Stalin pays tribute to Gandhi
-
எழும்பூர் அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச்செயலக அதிகாரிகள், ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்பு
சென்னை, ஜன. 30
தியாகிகள் தினம் : மகாத்மா காந்தி படத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை: தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜன.30-ந்தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக பாடுபட்டவர்களை போற்றும் வகையில் தியாகிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படியுங்கள் : அமெரிக்காவில் பயணிகள் ஜெட் விமானம் – ராணுவ ஹெலிஹாப்டர் மோதல் : 67 பேர் பலியா ?
இதைத்தொடர்ந்து தலைமைச்செயலகத்தில் ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன்.அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமை ஆகும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச்செயலக அதிகாரிகள், ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.