பல்கலை கழக பட்டமளிப்பு விழாகளை புறக்கணிக்கும் அமைச்சர் பொன்முடி
Minister Ponmudi boycotts university graduation ceremonies
-
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது.
-
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்காமல் புறக்கணிப்பதாக தகவல்
சென்னை, நவ. 08
பல்கலை கழக பட்டமளிப்பு விழாகளை புறக்கணிக்கும் அமைச்சர் பொன்முடி: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இவ்விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.
இதையும் படியுங்கள் : கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் | தமிழக அரசு
இந்நிலையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்காமல் புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்க ஒப்புதல் வழங்காத கவர்னரை கண்டித்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் அமைச்சர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.