
முஸ்லீம் குடும்பத்தின் மீது ஹோலி கலர் பொடி தூவி, தண்ணீர் ஊற்றி அட்டகாசம்
Miscreants sprinkled Holy color powder and water is poured on the Muslim family
பிஜ்னூர், மார்ச். 24
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தின் மீது சிலர் வலுக்கட்டாயமாக ஹோலி கலர் பொடி தூவி, தண்ணீர் ஊற்றிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அந்த வீடியோவில் உள்ள ஹோலி கொண்டாட்டத்தின் போது ஆண்கள் “ஜெய் ஸ்ரீ ராம்” கோஷங்களை எழுப்புகின்றனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இந்த சம்பவம் மார்ச் 20 அன்று பிஜ்னூர் நகரின் தாம்பூர் பகுதியில் நடந்தது என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் கடத்தப்பட்ட 250க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் விடுவிப்பு
இது தொடர்பாக அனிருத் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளது. மேலும், வீடியோவில் உள்ள மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்