நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் கடத்தப்பட்ட 250க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் விடுவிப்பு
More than 250 kidnapped school students released in northwest Nigeria
-
பள்ளி மாணவர்களை மீட்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். கடத்தப்பட்ட மாணவர்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது.
-
கரிஜா நகரில் இருந்து கடத்தப்பட்ட 250 மாணவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும், மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி விடுதலை செய்வதற்காக நடவடிக்கை மேற்கொண்ட நைஜீரிய அதிபருக்கு நன்றி கூறினார் கடுனா மாநில ஆளுநர் உபா சானி
நைஜீரியா, மார்ச். 24
வடமேற்கு மற்றும் வட-மத்திய நைஜீரியாவில் மக்களை குறிவைப்பது, கிராமங்களை கொள்ளையடிப்பது மற்றும் பணத்திற்காக வெகுஜன மக்கள் கடத்தல்களை மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில், நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த கடத்தலில் துப்பாக்கி ஏந்தியவர்களால் கடத்தப்பட்ட 250க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள் : ஐபிஎல் டி 20 கிரிக்கெட் : பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி
கடந்த மார்ச் 7ம் தேதி அன்று கடுனா மாநிலத்தின் குரிகாவில் நடந்த கடத்தல் சம்பவம், கடந்த ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாகும். பள்ளி மாணவர்களை மீட்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். கடத்தப்பட்ட மாணவர்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது.
இதுகுறித்து கடுனா மாநில ஆளுநர் உபா சானி வெளியிட்டுள்ள அறிக்கையில்”கடத்தப்பட்ட குரிகா பள்ளி குழந்தைகள் காயமின்றி விடுவிக்கப்படுகிறார்கள். கரிஜா நகரில் இருந்து கடத்தப்பட்ட 250 மாணவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும், மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி விடுதலை செய்வதற்காக நடவடிக்கை மேற்கொண்ட நைஜீரிய அதிபருக்கு நன்றி கூறினார்.
மேலும், மாணவர்களை திருப்பி அனுப்புவதற்கு கடத்தல்காரர்கள் பெரிய தொகையை கேட்டதாக உறவினர்கள் கூறினர். ஆனால் ஜனாதிபதி டினுபு பணம் செலுத்த வேண்டாம் என்று பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டதாக கூறினார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்