Wednesday, December 18, 2024

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ‘நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ‘நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’

‘Nayanthara beyond the fairy tale’ now in Netflix ott

  • ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற அடைமொழியை ‘நடிகை’ ஒருவர் பெறுவதற்கு பின்னால் உள்ள போராட்டச் சுவடுகளை தாங்கியிருக்கிறது இந்த ஆவணப்படம்

  • அப்போது உருவகேலி, உடல் எடை தொடர்பான விமர்சனங்கள் என்னை துரத்தின

சென்னை, டிச.03

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ‘நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’: நயன்தாராவின் திரையுலக பயணம் குறித்தும், திருமணம் குறித்தும் பேசுகிறது ‘நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’ (Nayanthara beyond the fairy tale). இந்த ஆவணப்படம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது. சரி, எப்படி இருக்கிறது நயன்தாரா ஆவணப்படம்.

ஆண்கள் ஆதிக்கம் மேலோங்கியிருக்கும் இந்திய திரையுலகில் அவர்களுக்கு நிகராக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற அடைமொழியை ‘நடிகை’ ஒருவர் பெறுவதற்கு பின்னால் உள்ள போராட்டச் சுவடுகளை தாங்கியிருக்கிறது இந்த ஆவணப்படம். ஆனால், அவற்றில் முழுமையற்ற உணர்வும், மேம்போக்கான தன்மையும் இருப்பதை உணர முடிகிறது.

கேரளாவின் சிறிய நகரமான திருவல்லாவில் சிஏ படிக்க ஆர்வமாக இருந்த ‘டயானா’வுக்கு சினிமா பற்றிய பெரிய கனவுகள் ஏதும் இருந்திருக்கவில்லை. மலையாள இயக்குநர் சத்தியன் அந்திக்காடு தொலைபேசியில் அழைத்த அந்த நொடி பெரும் நட்சத்திர அந்தஸ்துக்கான விதையாக மாறிப்போனது. திரையுலக வாய்ப்பை தொடக்கத்தில் மறுத்த டயானா, “நள்ளிரவு 3 மணி. அசந்து தூங்கி கொண்டிருந்த என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு படத்தில் நடிக்கவில்லை என்றார் நயன்தாரா. அவரிடம் நீ இரண்டு தவறு செய்கிறாய். ஒன்று 3 மணிக்கு தொலைபேசியில் அழைத்தது. மற்றொன்று திரையுலக வாய்ப்பை தவறவிட்டது என்றேன்” என சொல்கிறார் இயக்குநர் சத்தியன்.

கடந்த 2003-ல் சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் ஜெயராம் நடிப்பில் வெளியான ‘மனசினக்கரே’ படம் தான் நயன்தாராவின திரையுலக அறிமுகம். டயானாவாக இருந்தவரை நயன்தாரா என பெயர் மாற்றம் செய்தவர் சத்தியன் அந்திக்காடு. இந்தச் சம்பவங்களின் தொகுப்புகள் இயக்குநர்களின் நேரடி தகவல்கள் ஆவணப்படத்தில் சுவராஸ்யமாகவே இருந்தன.

அடுத்த படமே இயக்குநர் ஃபாசில் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘விஸ்மயத்தும்பது’ (Vismayathumbathu). இந்தப் படம் குறித்து இயக்குநர் ஃபாசில் பகிர்ந்த தகவல்களும் கவனிக்க வைக்கின்றன. அடுத்து டாப் கியரில் சரத்குமாருடன் ‘ஐயா’, ரஜினியுடன் ‘சந்திரமுகி’, மம்மூட்டியுடன் ‘ராப்பகல்’ என வளர்ந்த நயன்தாராவுக்கு ‘கஜினி’ திரைப்படத்தின் விமர்சனங்கள் சவலாக இருந்ததாக அவரே குறிப்பிடுகிறார்.

“அப்போது உருவகேலி, உடல் எடை தொடர்பான விமர்சனங்கள் என்னை துரத்தின. என் நடிப்பை குறை சொன்னால் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால், இதை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் திணறினேன்” என்கிறார் நயன்தாரா. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் குறித்தும், அந்த விமர்சனத்தை எதிர்கொண்ட விதம் குறித்து ஆவணப்படம் அழுத்தமாக பதிவு செய்யாமல் ‘பில்லா’ படத்துக்கு நகர்கிறது.

பல்வேறு காரணங்களுக்காக நயன்தாராவின் பெரும்பாலான திரைப்படங்கள் குறித்து பேசப்படாமல் சொற்ப படங்கள் மற்றும் தகவல்களை மட்டுமே தந்து செல்லும் ஆவணப்படம் நயன்தாராவின் திரையுலக வாழ்வின் ஏற்ற இறக்கங்களை உணர்த்தும் வகையில் முழுமையாக பதிவு செய்யவில்லை.

இடையிடையே தன் காதல் வாழ்க்கை குறித்தும், நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டது பற்றி பகிர்கிறார் நயன்தாரா. அது குறித்தும் இன்றும் தன்னிடம் கேட்பவர்கள், பொய்க் கதைகளை உருவாக்குபவர்கள், சம்பந்தப்பட்ட ஆணிடம் அது தொடர்பாக ஏன் கேட்கவில்லை, அவர்களை விமர்சிக்காதது ஏன் என நயன்தாரா குறிப்பிடும் இடங்கள் உண்மையில் முக்கியமானவை.

ஒரு கட்டத்தில் திரையுலகிலிருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டதாக கூறுகிறார். இந்த இடத்தில் அதற்கான பின்னணி பற்றியும், அவருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் குறித்தும் பேசியிருக்க வேண்டிய படம், அது தொடர்பாக வெளிப்படையாக எதையுமே பதிவு செய்யவில்லை.

மேலும், இயக்குநர்கள் சத்தியன் அந்திக்காடு, ஃபாசிலை தாண்டி, ராணா, நாகசைதன்யா, ராதிகா, பார்வதி, உபேந்திரா, தமன்னா, விஜய் சேதுபதி, அட்லீ என பேசும் யாரும் அவரை புகழ்வதைத் தாண்டி வேறு எந்தக் கூடுதல் தகவலையும் தராதது சோர்வு.

நடிகை ஒருவரின் திரையுலக பயணம் என குறிப்பிடும் ஆவணப்படத்தில் நிறைய இடங்களில் அதற்கான போதாமைகள் இருப்பதைக் காண முடிகிறது. உதாரணமாக ‘நானும் ரௌடி தான்’ படத்துடன் திரையுலக பகுதிகள் முடிந்து காதல் பயணம் தொடங்குகிறது. அந்தப் பகுதி தொடங்கியதில் இருந்து அப்படியே சட்டென சினிமா பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, இரு காதலர்களின் உரையாடல்களாகவும், திருமண நிகழ்வாகவும் சுருங்கிவிடுகிறது. சுவாரஸ்யமின்மையும், அயற்சியும் கூடவே ஒட்டிக்கொண்டு தொடர மறுக்கின்றன.

21 ஆண்டு காலமாக சினிமாவில் தனித்தொரு பெண்ணாக கோலோச்சும் நடிகையின் திரையுலக பயணத்தை விவரிக்கும் ஆவணப்படம் வெறும் சடங்காக உருவாகியிருக்கிறது. ஆரம்பம் ஆர்வமாக இருந்தாலும் நீட்சியில் கவனம் செலுத்தப்படவில்லை. தன்னுடைய ஆதர்ச நாயகியின் திரையுலக வாழ்க்கை பயணத்தை அறியும் ஆவலுடன், உத்வேகத்தை பெற நினைக்கும் ரசிகர்களுக்கு விக்கிபீடியா தகவல்களை தாண்டி சொற்பமே மிஞ்சுகிறது.

இந்த ஆவணப் படத்தின் ஓரிடத்தில் நடிகை ராதிகா, “நானும் ரவுடி தான் பட சமயத்தில் தனுஷ் என்னை தொடர்பு கொண்டு ‘நயன்தாராவும், விக்னேஷ் சிவனும்’ காதலிக்கிறாங்க… உங்களுக்கு உணர முடியுதா?’ என கேட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அதை கவனிக்கவே இல்லை” என்கிறார் ராதிகா. அதேபோல ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில காட்சிகளும் இந்த ஆவணப்படத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக, தொடக்கத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும் இந்த ஆவணப்படம், ஒரு கட்டத்தில் அதற்கான நியாயத்தை சேர்க்கத் தவறி, தகவல்களின் போதாமைகள், அழுத்தமின்மை, மேம்போக்குத் தன்மை காரணமாக முழுமையற்ற உணர்வைத் தருகிறது.

அடுத்த படமே இயக்குநர் ஃபாசில் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘விஸ்மயத்தும்பது’ (Vismayathumbathu). இந்தப் படம் குறித்து இயக்குநர் ஃபாசில் பகிர்ந்த தகவல்களும் கவனிக்க வைக்கின்றன.

அடுத்து டாப் கியரில் சரத்குமாருடன் ‘ஐயா’, ரஜினியுடன் ‘சந்திரமுகி’, மம்மூட்டியுடன் ‘ராப்பகல்’ என வளர்ந்த நயன்தாராவுக்கு ‘கஜினி’ திரைப்படத்தின் விமர்சனங்கள் சவலாக இருந்ததாக அவரே குறிப்பிடுகிறார்.

“அப்போது உருவகேலி, உடல் எடை தொடர்பான விமர்சனங்கள் என்னை துரத்தின. என் நடிப்பை குறை சொன்னால் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால், இதை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் திணறினேன்” என்கிறார் நயன்தாரா.

இதையும் படியுங்கள் : இஸ்ரேல் பணயக்கைதிகளை காசா உடனே விடுவிக்க வேண்டும் – டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு காலக்கெடு

அதன் பிறகு அவர் நடித்த படங்கள் குறித்தும், அந்த விமர்சனத்தை எதிர்கொண்ட விதம் குறித்து ஆவணப்படம் அழுத்தமாக பதிவு செய்யாமல் ‘பில்லா’ படத்துக்கு நகர்கிறது.

பல்வேறு காரணங்களுக்காக நயன்தாராவின் பெரும்பாலான திரைப்படங்கள் குறித்து பேசப்படாமல் சொற்ப படங்கள் மற்றும் தகவல்களை மட்டுமே தந்து செல்லும் ஆவணப்படம் நயன்தாராவின் திரையுலக வாழ்வின் ஏற்ற இறக்கங்களை உணர்த்தும் வகையில் முழுமையாக பதிவு செய்யவில்லை. இடையிடையே தன் காதல் வாழ்க்கை குறித்தும், நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டது பற்றி பகிர்கிறார் நயன்தாரா.

அது குறித்தும் இன்றும் தன்னிடம் கேட்பவர்கள், பொய்க் கதைகளை உருவாக்குபவர்கள், சம்பந்தப்பட்ட ஆணிடம் அது தொடர்பாக ஏன் கேட்கவில்லை, அவர்களை விமர்சிக்காதது ஏன் என நயன்தாரா குறிப்பிடும் இடங்கள் உண்மையில் முக்கியமானவை.

ஒரு கட்டத்தில் திரையுலகிலிருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டதாக கூறுகிறார். இந்த இடத்தில் அதற்கான பின்னணி பற்றியும், அவருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் குறித்தும் பேசியிருக்க வேண்டிய படம், அது தொடர்பாக வெளிப்படையாக எதையுமே பதிவு செய்யவில்லை. மேலும், இயக்குநர்கள் சத்தியன் அந்திக்காடு, ஃபாசிலை தாண்டி, ராணா, நாகசைதன்யா, ராதிகா, பார்வதி, உபேந்திரா, தமன்னா, விஜய் சேதுபதி, அட்லீ என பேசும் யாரும் அவரை புகழ்வதைத் தாண்டி வேறு எந்தக் கூடுதல் தகவலையும் தராதது சோர்வு.

நடிகை ஒருவரின் திரையுலக பயணம் என குறிப்பிடும் ஆவணப்படத்தில் நிறைய இடங்களில் அதற்கான போதாமைகள் இருப்பதைக் காண முடிகிறது. உதாரணமாக ‘நானும் ரௌடி தான்’ படத்துடன் திரையுலக பகுதிகள் முடிந்து காதல் பயணம் தொடங்குகிறது.

அந்தப் பகுதி தொடங்கியதில் இருந்து அப்படியே சட்டென சினிமா பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, இரு காதலர்களின் உரையாடல்களாகவும், திருமண நிகழ்வாகவும் சுருங்கிவிடுகிறது. சுவாரஸ்யமின்மையும், அயற்சியும் கூடவே ஒட்டிக்கொண்டு தொடர மறுக்கின்றன.

21 ஆண்டு காலமாக சினிமாவில் தனித்தொரு பெண்ணாக கோலோச்சும் நடிகையின் திரையுலக பயணத்தை விவரிக்கும் ஆவணப்படம் வெறும் சடங்காக உருவாகியிருக்கிறது. ஆரம்பம் ஆர்வமாக இருந்தாலும் நீட்சியில் கவனம் செலுத்தப்படவில்லை.

தன்னுடைய ஆதர்ச நாயகியின் திரையுலக வாழ்க்கை பயணத்தை அறியும் ஆவலுடன், உத்வேகத்தை பெற நினைக்கும் ரசிகர்களுக்கு விக்கிபீடியா தகவல்களை தாண்டி சொற்பமே மிஞ்சுகிறது.

இந்த ஆவணப் படத்தின் ஓரிடத்தில் நடிகை ராதிகா, “நானும் ரவுடி தான் பட சமயத்தில் தனுஷ் என்னை தொடர்பு கொண்டு ‘நயன்தாராவும், விக்னேஷ் சிவனும்’ காதலிக்கிறாங்க… உங்களுக்கு உணர முடியுதா?’ என கேட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அதை கவனிக்கவே இல்லை” என்கிறார் ராதிகா. அதேபோல ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில காட்சிகளும் இந்த ஆவணப்படத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக, தொடக்கத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும் இந்த ஆவணப்படம், ஒரு கட்டத்தில் அதற்கான நியாயத்தை சேர்க்கத் தவறி, தகவல்களின் போதாமைகள், அழுத்தமின்மை, மேம்போக்குத் தன்மை காரணமாக முழுமையற்ற உணர்வைத் தருகிறது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles