Home இந்தியா பிஜேபிக்கு எதிராக அணி திரட்டும் நிதிஷ் குமாரின் முயற்சி வெற்றி பெறாது – பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை

பிஜேபிக்கு எதிராக அணி திரட்டும் நிதிஷ் குமாரின் முயற்சி வெற்றி பெறாது – பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை

0
பிஜேபிக்கு எதிராக அணி திரட்டும் நிதிஷ் குமாரின் முயற்சி வெற்றி பெறாது – பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை
nithish kumar

பிஜேபிக்கு எதிராக அணி திரட்டும் நிதிஷ் குமாரின் முயற்சி வெற்றி பெறாது – பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை

nithish kumar’s attempt to rally against BJP won’t work – prashant kishore warns

  • 2019ல் சந்திரபாபு நாயுடுவுக்கு நடந்தது தான் நிதிஷ் குமாருக்கும் நடக்கும் என்று எச்சரித்துள்ளார் பிரசாந்த் கிஷோர்

  • ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகரராவ் ஆகியோரையும் நிதிஷ்குமார் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல்

டெல்லி , ஏப். 26

2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் அவரை விமர்சித்துள்ளார்.

2019ல் சந்திரபாபு நாயுடுவுக்கு நடந்தது தான் நிதிஷ் குமாருக்கும் நடக்கும் என்று எச்சரித்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவுக்கு எதிரான வலுவான எதிரணியைக் கட்டமைக்கும் முயற்சிகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி

காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணியை அமைக்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முயன்று வருகிறார். சந்திரசேகர் ராவ், மூன்றாவது அணியைக் கட்டமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.இந்நிலையில், பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசி வருகிறார்.

இந்த மாத தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார்.

நிதிஷ் குமார் நேரில் சந்திப்பு

மேலும், இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துப் பேசினார். இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மற்றும், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை நிதிஷ் குமார் மற்றும் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்துப் பேசினர்.

மம்தா, அகிலேஷ் யாதவ் ஆகியோரைத் தொடர்ந்து ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகரராவ் ஆகியோரையும் நிதிஷ்குமார் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரையும் சந்திப்பதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை என்றும் வெகு விரைவில் இந்தச் சந்திப்பு நடைபெறும் என்றும் ஐக்கிய ஜனதா தள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.