Home News பயப்படாமல் செய்தி வெளியிடுங்கள்; நாங்கள் இருக்கிறோம் – பிபிசி இயக்குனர் உறுதி

பயப்படாமல் செய்தி வெளியிடுங்கள்; நாங்கள் இருக்கிறோம் – பிபிசி இயக்குனர் உறுதி

0
பயப்படாமல் செய்தி வெளியிடுங்கள்; நாங்கள் இருக்கிறோம் – பிபிசி இயக்குனர் உறுதி

  • பிபிசி அச்சமோ தயவோயின்றி செய்தி வழங்குவதை தடுக்க முடியாது என்று அதன் தலைமை இயக்குநர் டிம் டேவி இந்தியாவில் உள்ள அதன் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

  • பிபிசி ஊழியர்களின் துணிச்சலுக்கு நன்றி தெரிவித்த டிம் டேவி, பாரபட்சமின்றி செய்தி வழங்குவதை விட முக்கியமானது எதுவுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

புது டெல்லி, பிப்.24

பிபிசி அச்சமோ தயவோயின்றி செய்தி வழங்குவதை தடுக்க முடியாது என்று அதன்  நிறுவன தலைவர் டிம் டேவி இந்தியாவில் உள்ள அதன் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சமீபத்தில் நடத்திய ஆய்வைத் தொடர்ந்து இந்த செய்தி வெளிவந்துள்ளது.

பிபிசி ஊழியர்களின் துணிச்சலுக்கு நன்றி தெரிவித்த டிம் டேவி, பாரபட்சமின்றி செய்தி வழங்குவதை விட முக்கியமானது எதுவுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : சி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று ஆரம்பம்

வருமான வரித்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் பிபிசி, சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையிலான ஆவணப்படத்தை ஒளிபரப்பியது.

இந்திய அரசாங்கம் அதை “விரோதமான பிரசாரம்” என்று அழைத்தது. மேலும் உள்நாட்டில் அது ஒளிபரப்பப்படுவதையும் தடுக்க முயற்சித்தது.

இந்த நிலையில் ஊழியர்களுக்கு டிம் டேவி அனுப்பிய மின்னஞ்சலில், ஊழியர்கள் தங்கள் பணிகளை திறம்படவும் பாதுகாப்பாகவும் செய்ய பிபிசி உதவும் என்று கூறியுள்ளார்.

“அச்சமோ தயவோயின்றி செய்தி வழங்கும் நமது திறனை விட முக்கியமானது எதுவுமில்லை,” என்று அவர் மேலும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.