
அயலக தமிழர் தினம் : தென் கொரிய பேரா. ஆரோகியராஜுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது
Non Resident Tamils day : Chief Minister M.K. Stalin awards South Korean Professor Dr. Arokiyaraj
-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த தமிழர்களுக்கு ‘கணியன் பூங்குன்றனார் விருதுகள்’ வழங்கி பாராட்டு
-
தென் கொரியாவில் செஜங் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் துறை உதவி பேராசிரியரும், கொரிய – தமிழ் ஆய்வாளருமான முனைவர் செ. ஆரோக்கியராஜூக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிப்பு
சென்னை, ஜன. 12
அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு, சென்னை நந்தம்பாக்கத்தில் அயலகத் தமிழர் தினவிழா கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த தமிழர்களுக்கு ‘கணியன் பூங்குன்றனார் விருதுகள்’ வழங்கி பாராட்டி பேசினார்.

விழாவில் தொழில் நுட்ப பிரிவில் தென் கொரியாவில் செஜங் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் துறை உதவி பேராசிரியரும், கொரிய – தமிழ் ஆய்வாளருமான முனைவர் செ. ஆரோக்கியராஜூக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார்.

தொடர்ந்து கல்வியாளர் சிங்கப்பூர் ராஜாராம் ராமசுப்பு, ஜப்பான் கமலக்கண்ணன், ஐக்கிய அரபு எமிரேட் ஸ்ரீதேவி சிவானந்தம், தொழில் அதிபர் லட்சுமணன் சோமசுந்தரம், சிங்கப்பூர் மருத்துவர் கங்காதர சுந்தர், இலங்கை கிருஷ்ணகாந்த் சந்தீப், அமெரிக்க மருத்துவர் விஜய் ஜானகிராமன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சகம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்