
-
வட மாநிலத் தொழிலாளர்கள், 0421-22-3313, 9498101300, 9498101320 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக காவல் துறை அறிவித்துள்ளது.
-
பீகார் ஐஏஎஸ் அதிகாரிகள் அலோக் குமார் மற்றும் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு இன்று மாலை சென்னை வருகிறது.
சென்னை, மார்ச். 04
வட மாநில தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக ஆலோசனை நடத்த பீகார் மாநில குழு தமிழகம் வர உள்ளது.
பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதை போலவும், அவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை எனவும் சொல்லி சில வீடியோக்கள் சமூகவலைதளத்தில் அவதூறாக பரவி வருகிறது.இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படியுங்கள் : ஆறு இருமல் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் ரத்து – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
அதில், தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்த வித அச்சுறுத்தலும் இல்லை. அவர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வட மாநிலத் தொழிலாளர்கள், 0421-22-3313, 9498101300, 9498101320 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக காவல் துறை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பீகார் குழு இன்று (மார்ச் 4) தமிழகம் வர உள்ளது.
பீகார் ஐஏஎஸ் அதிகாரிகள் அலோக் குமார் மற்றும் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு இன்று மாலை சென்னை வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசுடன் ஆலோசனை நடத்த உள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.