பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு ;தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
Opposition to Prime Minister Modi’s visit; Tamil Farmers’ Protection Association staged a black flag protest
-
விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட எம்.எஸ்.சாமிநாதன் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையின்படி, உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம்
-
தேர்தல் பரப்புரைக்காக திருப்பூர் மாவட்டம், பல்லடத்திற்கு இன்று வந்த பிரதமர் மோடியின் வருகையை கண்டித்து போராட்டம்
பல்லடம், பிப்.27
பல்லடம் வரும் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் திருப்பூர் அவிநாசிபாளையம் அலகுமலை நால் ரோட்டில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட எம்.எஸ்.சாமிநாதன் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையின்படி, உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.கொள்முதல் செய்ய வேண்டுமென 2006ல் வழங்கப்பட்ட பரிந்துரையை அன்றைய காங்கிரஸ் அரசும் அமல்படுத்தவில்லை.
இதையும் படியுங்கள் : நாகூர் ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த வேண்டும் : நாகூர் தர்கா நிர்வாகம் மீண்டும் கோரிக்கை
கடந்த 2014 ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சேர்த்து விலை நிர்ணயம் செய்வோம், கொள்முதல் செய்வோம் என விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை.
எனவே தேர்தல் பரப்புரைக்காக திருப்பூர் மாவட்டம், பல்லடத்திற்கு இன்று வந்த பிரதமர் மோடியின் வருகையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்