Home இந்தியா எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது – காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது – காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

0
எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது – காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
raghul priyanka

எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது – காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

Our family will never surrender – Congress General Secretary Priyanka Gandhi

  •  நரேந்திர மோடி, உங்கள் துதிபாடிகள், மறைந்த பிரதமரின் மகனை (ராகுல்காந்தி) ‘மீர் ஜாபர்’ என்று அழைக்கிறார்கள். உங்கள் முதல்வர்களில் ஒருவர் ராகுல்காந்தியின் தந்தை யார்? என்று கேட்கிறார்

  • எங்கள் ரத்த நாளங்களில் ஓடும் ரத்தத்துக்கு விசேஷ குணம் உள்ளது. உங்களைப் போன்ற ஒரு கோழைத்தனமான, அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரி முன்பு எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது. நீங்கள் விரும்பியதை செய்து கொள்ளுங்கள்.

புதுடெல்லி, மார்ச்.25

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியதாவது: எனது அண்ணன் ராகுல் காந்தியின் குரலை ஒடுக்க மத்திய அரசு சதி செய்கிறது. அவர் எதற்கும் அஞ்சமாட்டார்.

priyanka raghul
priyanka raghul

காஷ்மீர் பண்டிட் குடும்பம்

எப்போதும் போல உண்மையை பேசுவார். நாட்டு மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பார். எங்கள் தந்தை ராஜீவ் காந்தி நாட்டுக்காக உயிரை தியாகம் செய்தார்.அவரது மகனை துரோகி என்று குற்றம் சாட்டுகின்றனர்.

நாங்கள் காஷ்மீர் பண்டிட் குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஒட்டு மொத்த பண்டிட் குடும்பத்தை அவமதிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசினார்.

இதையும் படியுங்கள் : ‘ராகுல் காந்தியைப் பார்த்து, பாஜக பயந்து தகுதி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது’ – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

நரேந்திர மோடி, உங்கள் துதிபாடிகள், மறைந்த பிரதமரின் மகனை (ராகுல்காந்தி) ‘மீர் ஜாபர்’ என்று அழைக்கிறார்கள். உங்கள் முதல்வர்களில் ஒருவர் ராகுல்காந்தியின் தந்தை யார்? என்று கேட்கிறார்.

priyanka gandhi
priyanka gandhi

உண்மையான தேசபக்தர்

உங்களுக்கு எந்த நீதிபதியும் 2 ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கவில்லை. தகுதிநீக்கம் செய்யவில்லை. ராகுல்காந்தி உண்மையான தேசபக்தர். அதானியின் கொள்ளை பற்றியும், நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் பற்றியும் கேள்வி எழுப்பினார்.

இந்திய மக்களுக்காக குரல்

உங்கள் நண்பர் அதானி, பாராளுமன்றத்தை விட பெரியவரா? அவரது கொள்ளையை பற்றி கேள்வி எழுப்பினால், ஏன் அதிர்ச்சி அடைகிறீர்கள்? எங்கள் குடும்பத்தை வாரிசு அரசியல் செய்வதாக கூறுகிறீர்கள். ஆனால், இந்த குடும்பம்தான் ரத்தத்தை கொடுத்து ஜனநாயகத்தை வளர்த்தது. இந்திய மக்களுக்காக குரல் எழுப்பியது. உண்மைக்காக போராடியது.

priyanka gandhi
priyanka gandhi

எங்கள் ரத்த நாளங்களில் ஓடும் ரத்தத்துக்கு விசேஷ குணம் உள்ளது. உங்களைப் போன்ற ஒரு கோழைத்தனமான, அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரி முன்பு எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது. நீங்கள் விரும்பியதை செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.