Wednesday, December 18, 2024

நம்ம ஊரு, நம்ம பள்ளி திட்டம் | பாராட்டிய முன்னாள் கேரள ஆளுநர் பி.சதாசிவம்

நம்ம ஊரு, நம்ம பள்ளி திட்டம் | பாராட்டிய முன்னாள் கேரள ஆளுநர் பி.சதாசிவம்

Our town, our school project | Ex-Governor of Kerala P. Sathasivam praised

  • மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சி ஆகியவற்றை பயன்படுத்தி எதிர்கால இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர வேண்டும்.

  • ஒவ்வொரு மாணவர்களும் தாங்கள் படித்த பள்ளிக்கு முடிந்த வரையில் ஏதாவது உதவிகள் செய்திட வேண்டும். மேலும் விருப்பமுள்ளவர்கள் நாட்டிற்கு பணியாற்றிட ராணுவத்தில் சேர வேண்டும்.

திருப்பூர், நவ. 06

நம்ம ஊரு, நம்ம பள்ளி திட்டம் | பாராட்டிய முன்னாள் கேரள ஆளுநர் பி.சதாசிவம் : திருப்பூர் மாவட்டம் முத்தூர் தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான பி.சதாசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

our-town-our-school-project-ex-governor-of-kerala-p-sathasivam-praised
our-town-our-school-project-ex-governor-of-kerala-p-sathasivam-praised

அப்போது அவர் கூறியதாவது:-
தற்போதைய இந்தியாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தாலுகா அளவில் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கிராம பகுதி மாணவ, மாணவிகளின் கல்லூரி கல்வி கனவு நிறைவேறி வருகிறது. மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சி ஆகியவற்றை பயன்படுத்தி எதிர்கால இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர வேண்டும்.

இதையும் படியுங்கள் : இண்டேன் சமையல் எரிவாயு தானியங்கி பதிவு தமிழ் சேவையை தர வேண்டும் | மதுரை எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

நான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தபோது மும்பை குண்டு வெடிப்பு, ராஜீவ் காந்தி கொலை வழக்கு, எம்.பி. எம்.எல்.ஏ-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு உள்பட 1000-க்கும் மேற்பட்ட வழக்குகள் நன்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தாய், தந்தை மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்களை மதித்து பேணி காக்கவேண்டும். கடவுளுக்கு அடுத்தபடியாக பெற்றோர்களை இறுதி வரையில் வணங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நம்ம ஊரு, நம்ம பள்ளி திட்டம் மிக சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு மாணவர்களும் தாங்கள் படித்த பள்ளிக்கு முடிந்த வரையில் ஏதாவது உதவிகள் செய்திட வேண்டும். மேலும் விருப்பமுள்ளவர்கள் நாட்டிற்கு பணியாற்றிட ராணுவத்தில் சேர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles