
பிளஸ் 2 தேர்வு முடிவு மே.8 ஆம் தேதி வெளியீடு – பள்ளிக் கல்வித்துறை
plus 2 results on may 8 th – department of school education
-
மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரியில் தேர்வு முடிவுகள்
-
உறுதிமொழி படிவத்திற்கு குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் மூலமாகவும் தேர்வு முடிவுகள்
சென்னை, ஏப். 26
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு மே.8 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும்.
இதையும் படியுங்கள் : அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் ; சிஏஜி அறிக்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரியில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். அதில், மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும், உறுதிமொழி படிவத்திற்கு குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.