
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தேச தலைவர்கள் காந்தி, நேரு, படேல் படங்களை புறக்கணித்து சாவர்கர் படத்தை திறப்பதா ? – ஆர்எஸ்எஸ் – பாஜக அரசுக்கு விஞ்ஞானி பொன்ராஜ் கண்டனம்
pm pays tribute savarkar, ignore freedom leaders, gandhi, nehru, patel pictures – scientist ponraj condemns
-
நாடாளுமன்றத்தின் தலைவரும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் முதல் பதவியும் குடியரசுத் தலைவர்தான்.
-
நேரு, சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்ட தலைவர்களின் படம் இல்லாத நிலையில் சாவர்க்கர் படம்
திருப்பூர் , மே. 30
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
எட்வின் லுட்டின்ஸ் கட்டிய கட்டிங்கள்
இதன் பின்பு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைய சூழலில் எட்வின் லுட்டின்ஸ் கட்டிய கட்டிங்கள் அனைத்தும் வலுவாகத்தான் உள்ளது. இந்திய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி 70 அல்லது 100 ஆண்டுகள் ஆகி இருந்தாலும் அதை நன்றாக பராமரித்தாலே போதும் என்ற நிலையில்தான் அந்த கட்டிடம் உள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் அமைக்க வேண்டும் என்று கடந்தமுறை முடிவெடுத்து, இந்த ஆட்சியில் திறந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் இவ்வளவு செலவு செய்து கட்ட வேண்டுமா? என்பது அனைவரது கேள்வியாக உள்ளது.
முதல் பதவி
ஒருவேளை புதிய கட்டிடம் கட்டப்படுவது அவசியம் என்றாலும், அதை திறந்து வைப்பதில் தொடக்கத்தில் இருந்தே சர்ச்சை நிலவி வந்த நிலையில், நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்காதது வருத்தத்துக்குரியது. நாடாளுமன்றத்தின் தலைவரும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் முதல் பதவியும் குடியரசுத் தலைவர்தான்.
இதையும் படியுங்கள் : 5வது ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கேயின் மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
அன்றைய குடியரசுத் தலைவர் தவிர்த்து அடிக்கல் நாட்டப்பட்டது. இன்றைய குடியரசுத் தலைவரை தவிர்த்து திறக்கப்பட்டுள்ளது. இது ஒட்டு மொத்தமாக ஒரு குடியரசுத் தலைவரை புறந்தள்ளி உள்ளார்கள் என்றுதான் கூற முடியும். இதேபோல் இந்த கட்டிட திறப்பு விழா சாவர்க்கர் பிறந்தநாளன்று நடைபெற்றுள்ளது. அவருடைய படத்திற்கு மலர் தூவி, மரியாதை செலுத்தி திறந்து வைத்துள்ளனர்.
அடையாள அரசியல்
சுதந்திரத்திற்கு போராடிய மகாத்மாகாந்தி படம் இல்லை. நேரு, சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்ட தலைவர்களின் படம் இல்லாத நிலையில் சாவர்க்கர் படம் நாடாளுமன்றத்தில் திறந்து வைக்கப்படுகிறது என்றால் இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ். போன்ற சித்தாந்த அடிப்படையில் மட்டுமே இது நடந்துள்ளது.பிரதமர் மோடி நடத்துவது ஒரு அடையாள அரசியலாகும். அடையாள அரசியல் மூலமாக நாடு வளராது. நாட்டு மக்களுக்கும் எந்த பயனும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.