
-
கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டபடி போராட்டம்
-
அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என கல்லூரி முதல்வர் மாணவிகளிடம் உறுதி
தூத்துக்குடி, மார்ச். 20
தூத்துக்குடி-எட்டையபுரம் சாலையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து அந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள் தங்கள் பெற்றோருடன் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவிகள் அனைவரும் ஒன்று திரண்டு கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையும் படியுங்கள் : தமிழ்நாடு அரசின் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்
அப்போது மாணவிகளுக்கு ஆதரவாக அவர்களது பெற்றோர்களும் சேர்ந்து தாளாளரை முற்றுகையிட்டு அடிப்படை வசதி செய்யகோரி கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர்.
இதனால் மாணவிகளை அமைதிபடுத்த கல்லூரி நிர்வாகத்தினர் கடும் முயற்சி மேற்கொண்டனர். இதனையடுத்து அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என கல்லூரி முதல்வர் மாணவிகளிடம் உறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து மாணவிகளும் பெற்றோர்களும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தின் காரணமாக எட்டையாபுரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.