Home இந்தியா பிரியங்கா காந்தி ‘சத்தியாகிரக’ உண்ணாவிரதப் போராட்டம் -காவல்துறை அனுமதி மறுப்பு;144 தடை உத்தரவு

பிரியங்கா காந்தி ‘சத்தியாகிரக’ உண்ணாவிரதப் போராட்டம் -காவல்துறை அனுமதி மறுப்பு;144 தடை உத்தரவு

0
பிரியங்கா காந்தி ‘சத்தியாகிரக’ உண்ணாவிரதப் போராட்டம் -காவல்துறை அனுமதி மறுப்பு;144 தடை உத்தரவு
SANGALP SATHYAGRAGHA

பிரியங்கா காந்தி ‘சத்தியாகிரக’ உண்ணாவிரதப் போராட்டம் -காவல்துறை அனுமதி மறுப்பு;144 தடை உத்தரவு

Priyanka Gandhi’s ‘Satyagraha’ hunger strike – Police denied permission; 144 Prohibition Order

டெல்லி, மார்ச் 26

வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் அமைதி வழியில் ‘சத்தியாகிரக’ உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லி ராஜ்காட் பகுதியில் இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். மேலும், அந்த இடத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பித்துள்ளனர்.

அமைதி வழியில் போராட்டம்

இருந்தும் காவல் துறையின் தடை உத்தரவை மீறி பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் முன்னிலையில் அந்தப் பகுதியில் அமைதி வழியில் போராடி வருகிறார்.

இதையும் படியுங்கள் :இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் :36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டத

அந்த கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அமைதி வழியில் போராட்டம் நடத்தும் திட்டம் தங்களுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிகிறது.

144 தடை

கோவா, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் என நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டபடி அமைதி வழியில் போராட்டம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி டெல்லி காவல் துறையினர் போராட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அதோடு ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளனர்.

மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய காரணத்திற்காக ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. அதன் அடிப்படையில் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

கைது

ராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து அறவழியில் நாடெங்கும் ஆங்காங்கே  கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது.போலீசார் அவர்களை கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர் .

போலீஸ் பாதுகாப்பு

போலீசாரின் தடையை மீறி காங்கிரசார் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி நினைவிடம் அருகே நடந்த இந்த சத்தியாகிரகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காங்கிரசாரின் போராட்டத்தையொட்டி டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்