-
புதுவையில் மின் ஆய்வுகளை மேம்படுத்த மின்சார உரிமம் வழங்கும் வாரியம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
-
70 முதல் 79 வயது வரை வழங்கப்படும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை ரூ.3 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் ரூ.2 ஆயிரம் முதியோர் பயன்பெறுவர்.
புதுச்சேரி, மார்ச் 13
புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்க சாமி தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
புதுவையில் மின் ஆய்வுகளை மேம்படுத்த மின்சார உரிமம் வழங்கும் வாரியம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். வில்லியனூர், காலாப்பட்டு, திருபுவனை, கோர்க்காடு தேத்தாம்பாக்கம் துணை மின் நிலையங்களின் மின் மாற்றிகளின் திறனை மேம்படுத்த ரூ.44 கோடியே 13 லட்சம் செலவிடப்படும்.
அனைத்து தெருவிளக்குகளும் எல்.இ.டி. மின் விளக்குகளாக ரூ.4.50 கோடியில் மாற்றப்படும். இத்துறைக்கு ரூ.ஆயிரத்து 946 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு துறை நவீனமயமாக்கப்படும்.
புதுவை, வில்லியனூர், தவளகுப்பம், லிங்காரெட்டி பாளையத்தில் 4 புதிதாக 4 தீயணைப்பு நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தப் படும். கரையாம்புத்தூர், காரைக்கால் டி.ஆர்.பட்டினம் பகுதியில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும்.
54 மீட்டர் உயரம் செல்லக்கூடி ஸ்கைலிப்ட் தீயணைப்பு ஊர்திகளின் பராமரிப்புக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு சாதனங்களும் வாங்கப்படும்.
மீனவ முதியோரை பாதுகாக்க 70 முதல் 79 வயது வரை வழங்கப்படும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை ரூ.3 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் ரூ.2 ஆயிரம் முதியோர் பயன்பெறுவர்.
சென்டாக் மூலம் தேர்வு செய்யப்படும் மீனவ மாணவருக்கு அட்டவணை, பழங்குடியினர் நலத்துறையால் வழங்கப்படும் கல்வி நிதி உதவிக்கு நிகரான நிதி வழங்கப்படும். நவீன முன்மாதிரி மீனவ கிராமம் அமைக்க மத்திய அரசிடம் இருந்து ரூ.100 கோடி நிதி கோரப்படும்.
இதையும் படியுங்கள் : பாராளுமன்ற தேர்தலுக்கு புது வியூகங்களை வகுக்கும் காங்கிரஸ்
மின்னியல் மீன் காட்சி யகம், கடலுக்கு அடியில் உயிரியல் பொழுது போக்கு பூங்கா அமைக்க மத்திய அரசிடம் ரூ.42 கோடி கோரப்படும். மீன் பதப்படுத்தும் தொழிலை பாதுகாக்க ஊக்குவிப்பு மையம் ரூ.5 கோடியில் அமைக்கப்படும்.
புதுவை அரியாங்குப்பத்தில் இ.எஸ்.ஐ. பயனாளிகள் பயன்பெறும் வகையில் 2 டாக்டர் உள்ளடக்கிய துணை மருத்துவ நிலையம் அமைக்கப்படும். கர்ப்ப வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க அனைத்து பெண்களுக்கும் கட்டாய பரிசோதனை செய்யப்படும்.
இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா உதவியுடன் புதுவையில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.