-
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் கேள்விக்கே இடமில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்
-
மோடி வெளிநாட்டுக்கு சென்று நாட்டு மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார் அதற்கு அவர் மன்னிப்பு கேட்டது இல்லை
புதுடெல்லி, மார்ச் 15
இந்திய ஜனநாயகம் சீர்குலைந்து வருவதாக ராகுல் காந்தி லண்டனில் பேசி இருந்தார். அவரது இந்த கருத்துக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள்: நாடாளுமன்றத்தின் முன்பு 144 தடை உத்தரவு
இந்த நிலையில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் கேள்விக்கே இடமில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அவர் இதுதொடர்பாக கூறியதாவது:-
மோடி வெளிநாட்டுக்கு சென்று நாட்டு மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார் அதற்கு அவர் மன்னிப்பு கேட்டது இல்லை. ஜனநாயகம் குறித்து பேசியது தொடர்பாக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் கேள்விக்கே இடமில்லை.
இவ்வாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.