Wednesday, December 18, 2024

இந்திய சந்தையில் ரியல்மி 10 ப்ரோ கோகோ கோலா லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஸ்மார்ட்போனில் பிரத்யேக கோகோ-கோலா யுஐ, ஐகான் பேக், டைனமிக் சார்ஜிங் எஃபெக்ட், ரிங்டோன், கோக் பபிள் நோட்டிஃபிகேஷன் டோன், கோகோ கோலா கேமரா ஃபில்ட்டர், பாட்டில் ஓபனிங் ஷட்டர் சவுண்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

மும்பை, பிப் 10

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் ரியல்மி 10 ப்ரோ கோகோ கோலா லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.

வலைதள முன்பதிவில் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக ரியல்மி அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மேட் இமிடேஷன் மெட்டல் பிராசஸ் செய்யப்பட்ட கோகோ கோலா லோகோ, கேமராவை சுற்றி சிவப்பு நிற வளையங்கள் உள்ளன.

இந்த ஸ்மார்ட்போனில் பிரத்யேக கோகோ-கோலா யுஐ, ஐகான் பேக், டைனமிக் சார்ஜிங் எஃபெக்ட், ரிங்டோன், கோக் பபிள் நோட்டிஃபிகேஷன் டோன், கோகோ கோலா கேமரா ஃபில்ட்டர், பாட்டில் ஓபனிங் ஷட்டர் சவுண்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் டீலக்ஸ் பாக்ஸ் செட் மற்றும் லிமிடெட் நம்பர் கார்டு, டிஐவை ஸ்டிக்கர்கள், பாட்டில் மூடி வடிவம் கொண்ட பிரத்யேக சிம் கார்டு பின், ரியல்மியோவ் கோகோ கோலா வடிவம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்மத்திய பட்ஜெட்: மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

6.72 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+LCD ஸ்கிரீன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட் ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் மாலி G68 MC4 GPU 8 ஜிபி LPDDR4X ரேம் 128 ஜிபி UFS 2.2 மெமரி மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி ஹைப்ரிட் டூயல் சிம் ஆண்ட்ராய்டு 13 மற்றும் ரியல்மி யுஐ 4.0 108MP பிரைமரி கேமரா 2MP போர்டிரெயிட் கேமரா 16MP செல்ஃபி கேமரா பக்கவாட்டில் கைரேகை சென்சார் 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2 யுஎஸ்பி டைப் சி 5000 எம்ஏஹெச் பேட்டரி 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ரியல்மி 10 ப்ரோ கோகோ கோலா எடிஷன் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இது ஸ்டாண்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போனை விட ரூ. 1000 விலை அதிகம் ஆகும். விற்பனை ரியல்மி, ப்ளிப்கார்ட் ஆன்லைன் வலைதளங்களிலும், ஆஃப்லைன் ஸ்டோர்களில் பிப்ரவரி 14 ஆம் தேதி துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆயிரம் யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

 

 

 

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles