பதிவு சான்றிதழ் 24 மணி நேரத்துக்குள் ; சட்ட மசோதா தாக்கல்
Registration certificate within 24 hours; Bill filing
-
வணிகம் தொடங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் பதிவுக்காக விண்ணப்பித்து பதிவு சான்றிதழ் பெற வேண்டும்
-
விண்ணப்ப படிவத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் மாற்றம் செய்திருந்தால் 30 நாட்களுக்குள் தொழில்துறை ஆய்வாளருக்கு தெரியப்படுத்த வேண்டும்
சென்னை, ஏப். 19
10 அல்லது அதற்கு மேற்பட்ட வேலை ஆட்கள் பணிபுரிகின்ற நிறுவனம் விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் உரிமையாளருக்கு பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மசோதா தாக்கல்
இந்த மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேரவையில் தாக்கல் செய்தார். தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்த சட்ட முன் வடிவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
பதிவு சான்றிதழ்
வணிகம் தொடங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் பதிவுக்காக விண்ணப்பித்து பதிவு சான்றிதழ் பெற வேண்டும். விண்ணப்பித்த நபருக்கு 24 மணி நேரத்துக்குள் பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும். பதிவு சான்றிதழ் ஆனது நிறுவனத்தின் முக்கியமான இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட வேண்டும்.
இதையும் படியுங்கள் : நொச்சிகுப்பம் மீனவர்களின் வாழ்வாதாரம் முதலமைச்சர் நடவடிக்கையால் மீண்டது
திருத்தம்
விண்ணப்ப படிவத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் மாற்றம் செய்திருந்தால் 30 நாட்களுக்குள் தொழில்துறை ஆய்வாளருக்கு தெரியப்படுத்த வேண்டும். திருத்தம் செய்யப்பட்டதற்கான புதிய பதிவுச் சான்றிதழை பெற வேண்டும்.
வேலை நிபந்தனை
1947-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களின் வேலை நேரம், வார ஓய்வு, விடுமுறைகள், உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு பற்றிய வேலை நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.