
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: பாகிஸ்தான் மீது நள்ளிரவில் இந்திய ராணுவம் தாக்குதல்
Retaliation to Pahalgam attack: Indian Army strikes Pakistan at midnight
டெல்லி, மே. 07
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடியை தொடங்கியிருக்கிறது. இந்த பதிலடியில் பீரங்கிகள் முக்கிய பங்காற்றியுள்ளன. குறிப்பாக எந்தவித தடையும் இன்றி பீரங்கி குண்டுகள் பாகிஸ்தானுக்குள் நுழைந்திருக்கின்றன.
நாடு முழுவதும் இன்று போர் ஒத்திகை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இன்று அதிகாலை 1:44 மணிக்கு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மற்றும் அவர்கள் செயல்படும் இடங்களை குறிவைதது இந்தியாவின் முப்படைகள் துல்லிய தாக்குதல்களை நடத்தியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’- என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களில் தாக்கியது. பாகிஸ்தான் இராணுவ தளங்கள் எதையும் இந்தியா குறிவைக்கவில்லை.

இந்த தாக்குதலில் பீரங்கிகள் முக்கிய பங்கு வகித்துள்ளன.
தனுஷ் ஹவிட்சர், எம்777 கே9, வஜ்ரா, பூஃபோர்ஸ், எஃப் எச் 77பி, அட்டாக்ஸ் என நவீன பீரங்கிகள் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. பொதுவாக இந்த வகை பீரங்கிகள் சில நூறு மீட்டர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்த கூடும். அதிகபட்சம் ராணுவ கவச வாகனத்தை துளைக்கும் திறன் கொண்டது. ஆனால் ஒரே நேரத்தில் பல பீரங்கிகள் ஒன்று சேரும்போது நிலைமை மோசாமாகலாம். இது மிகப்பெரிய ராணுவ படையை கூட சிதறி ஓட விடும் அளவுக்கு திறன் கொண்டதாக இருக்கும். இந்த குண்டுகளை இடைமறிப்பது சாத்தியமில்லாதது. காரணம் இது அதி வேகத்தில் பயணிக்கும்.
உதாரணத்திற்கு தனுஷ் ஹவிட்சர் பீரங்கியின் குண்டு 1 கி.மீ தொலைவை 1 விநாடியில் கடந்துவிடும். இவ்வளவு வேகமாக குண்டை தடுக்க துல்லியமான கண்காணிப்பு அமைப்பு தேவை. இஸ்ரேலிடம் உள்ள ஐயன்டோம் போன்ற அமைப்புகளால்தான் இது சாத்தியம். ஆனால் அதற்காக செலவு அதிகமாக இருக்கும். இந்த குண்டுகள் பீரங்கிகளை கூட அழிக்கும் திறன் கொண்டது என்பதால் எதிரிகள் கவனமாக இருக்க வேண்டும்.