அயோத்தி சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி – சீமான்
Rs 100 crore for combing Ayodhya preacher’s head – Seeman
-
சனாதனத்தை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறில்லை. அவர் எறிந்த பந்தை பா.ஜ.க.வினர் எடுத்து விளையாடுகிறார்கள்.
-
தலையை வெட்டுவேன், நாக்கை வெட்டுவேன் என்று கூறுபவர்கள் சாமியார் அல்ல கசாப்பு கடைக்காரர்கள்.
போரூர், செப்.06
அயோத்தி சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி – சீமான் : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் கிருஷ்ணர் ஜெயந்தி விழாவை தொண்டர்களுடன் கொண்டாடினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சனாதனத்தை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறில்லை. அவர் எறிந்த பந்தை பா.ஜ.க.வினர் எடுத்து விளையாடுகிறார்கள். ஒருவர் சொன்ன கருத்துக்கு கருத்துடன் தான் மோத வேண்டும். அதுதான் ஜனநாயகம்.அதை தவிர்த்து தலையை வெட்டுவேன் என்று கூறுவது முறையல்ல.
தலையை சீவினால் ரூ.100 கோடி
உதயநிதி ஸ்டாலின் தலையை சீவினால் ரூ.10 கோடி தருவதாக கூறிய அயோத்தி சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி நான் தருகிறேன். தலையை வெட்டுவேன், நாக்கை வெட்டுவேன் என்று கூறுபவர்கள் சாமியார் அல்ல கசாப்பு கடைக்காரர்கள்.
இதையும் படியுங்கள் : இந்தியா என்ற பெயரை மாற்ற ரூ 14000 கோடி | மதுரை எம்பி சு.வெங்கடேசன்
மானிட பிறப்பில் பாகுபாடு பார்ப்பவனை நான் எதிரியாக கருதுகிறேன். அந்த வகையில் சனாதனத்தை எதிர்க்கிறேன். கொரோனா, டெங்கு நோய் போல சனாதனத்தை உதயநிதி ஒழிக்க முன்வர வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
வெறும் வார்த்தையாக இருக்கக் கூடாது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பா.ஜ.க.வினர் கூறுகிறார்கள். அப்படி என்றால் கர்நாடகா அரசு காவிரி நீரை தமிழகத்திற்கு கொடுக்காமல் இருப்பது ஏன்? இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.