
சாலை, மேம்பால பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசாணை வெளியீடு
Rs. 7,500 crore allocated for road and flyover works – Tamil Nadu government issues order
-
நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு
-
ஆறுகளின் குறுக்கே 6 உயர்மட்ட சாலை அமைக்க ரூ.295 கோடி ஒதுக்கீடு
சென்னை, ஜூலை.07
தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3,268 கி.மீ.நீளத்திற்கு சாலை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 14 புறவழிச்சாலைகள் அமைப்பதற்காக ரூ.1,713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: அமெரிக்காவில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ; 68 பேர் உயிரிழப்பு, 27 மாணவிகளை காணவில்லை
ஆற்றுப்பாலம் சாலை விரிவாக்கம், மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆத்தூர், ஓசூரில் புறவழிச்சாலை அமைக்க ரூ.500 கோடி, ஆறுகளின் குறுக்கே 6 உயர்மட்ட சாலை அமைக்க ரூ.295 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் ரூ.348 கோடியில் 12.5 கி.மீ. புறவழிச்சாலை, நெல்லையில் ரூ.225 கோடியில் 12.4 கி.மீ. புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. விருத்தாசலம் – தொழுதூர், கொடை-வத்தலகுண்டு, சிவகாசி-விருதுநகர் சாலைகள் 4வழிச்சாலைகளாக மேம்படுத்தப்பட உள்ளன.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்