Home செய்திகள் ரஷ்யா மூன்று முக்கிய ஆணையத்தின் தேர்தலில் தோல்வி; ஐ நாவில் இடம்பெறுமா?

ரஷ்யா மூன்று முக்கிய ஆணையத்தின் தேர்தலில் தோல்வி; ஐ நாவில் இடம்பெறுமா?

0
ரஷ்யா மூன்று முக்கிய ஆணையத்தின் தேர்தலில் தோல்வி; ஐ நாவில் இடம்பெறுமா?
united nations

ரஷ்யா மூன்று முக்கிய ஆணையத்தின் தேர்தலில்  தோல்வி; ஐ நா வில் இடம்பெறுமா?

russia loses 3 important elections in commissions; will participate in united nations?

  • ஐ.நா. பொதுசபை இதுவரை, போர் தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 6 தீர்மானங்களுக்கு ஒப்புதல்

  • ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் பல்வேறு அமைப்புகளுக்கு கடந்த வாரம் தேர்தல்

நியூ யார்க், ஏப்.09

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஓர் ஆண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து அதை கடுமையாக எதிர்த்து வரும் ஐ.நா. பொதுசபை போரை நிறுத்த ரஷ்யாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மேலும் 193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பொதுசபை இதுவரை, போர் தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 6 தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் 54 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் பல்வேறு அமைப்புகளுக்கு கடந்த வாரம் தேர்தல் நடந்தது. இதில் முக்கியமான 3 அமைப்புகளில் ரஷ்யா தோல்வியடைந்தது.

இதையும் படியுங்கள் : பாஜக தலைவர் பதவி பறிப்பா ? டெல்லிக்கு அழைக்கப்பட்ட அண்ணாமலை

பெண்களின் நிலை குறித்த ஆணையத்தில் இடம் பெறுவதற்கான தேர்தலில் ருமேனியாவிடம் ரஷ்யா தோல்வியடைந்தது. அதே போல் ஐ.நா. குழந்தைகள் நிறுவனமான யுனிசெப் நிர்வாகக் குழுவின் உறுப்பினர் தேர்தலில் ரஷ்யா எஸ்டோனியாவிடம் தோற்றது.

குற்றத்தடுப்பு மற்றும் குற்றவியல் நீதிக்கான ஆணையத்தில் உறுப்பினராவதற்கான ரகசிய வாக்கெடுப்பில் ஆர்மீனியா மற்றும் செக் குடியரசு ஆகியவற்றால் ரஷ்யா தோற்கடிக்கப்பட்டது.

ரஷ்யாவின் இந்த தோல்வி உக்ரைன் மீதான அதன் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு வலுவாக உள்ளது என்பதற்கான தெளிவான அடையாளம் என அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன் பீல்ட் கூறினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.