Home செய்திகள் தமிழகம் முழுவதும் தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரம் விற்பனை 

தமிழகம் முழுவதும் தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரம் விற்பனை 

0
தமிழகம் முழுவதும் தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரம் விற்பனை 

தமிழகம் முழுவதும் தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரம் விற்பனை தொடக்கம்

Sale of gold bullion starts in Tamilnadu Post offices

  • தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரம் திட்டத்தின் கீழ், யார் வேண்டுமானாலும் தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இதற்கான வெளியீட்டு விலையை ஒரு கிராமுக்கு ரூ.6,199 என ரிசர்வ் வங்கி நிர்ணயம்.

  • ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், தபால் நிலையங்கள், அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள், என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ ஆகியவற்றில் தங்கப் பத்திரங்களை வாங்க முடியும்.

சேலம், டிச. 18

தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரம் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என சேலம் கிழக்கு தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். சேலம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தங்கப்பத்திரங்களை தபால் அலுவலங்களில் வாங்கி கொள்ள முடியும்.

தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரம்

தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரம் திட்டத்தின் கீழ், யார் வேண்டுமானாலும் தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்ய முயும். இதற்கான வெளியீட்டு விலையை ஒரு கிராமுக்கு ரூ.6,199 என ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி 6 மாதத்துக்கு ஒருமுறை பெற்றுக் கொள்ளலாம். முதிர்வு தொகை 24 கேரட் தங்கத்துக்கு ஈடாக அப்போதைய தங்கத்தின் மதிப்புக்கு பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், தபால் நிலையங்கள், அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள், என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ ஆகியவற்றில் தங்கப் பத்திரங்களை வாங்க முடியும்.

இதையும் படியுங்கள்: தென் மாவட்டங்களில் வரலாறு காணாத பேய் மழை ; தத்தளிக்கும் வீடுகள் – ரெயில், சாலை போக்குவரத்து நிறுத்தம்

சேலம் கிழக்கு தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அருணாசலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: “தங்கப்பத்திரம் சேமிப்பு திட்டம் நிதி ஆண்டு 2023-2024 பரிவர்த்தனையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த பரிவர்த்தனையில் ஒரு கிராம் தங்கப்பத்திரம் ரூ.6 ஆயிரத்து 199-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் 22-ந் தேதி வரை 5 நாட்களுக்கு மட்டும் சேலம் தலைமை தபால் அலுவலகம், ஆத்தூர் தலைமை தபால் அலுவலகம், அஸ்தம்பட்டி, செவ்வாய்பேட்டை, சேலம் தெற்கு, அம்மாபேட்டை, அழகாபுரம், பேர்லேண்ட்ஸ், கொண்டலாம்பட்டி, கெங்கவல்லி, பேளூர், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி, தம்மம்பட்டி, வாழப்பாடி, தலைவாசல், மல்லூர், ஏற்காடு உள்ளிட்ட அனைத்து துணை தபால் அலுவலகத்திலும் தங்கப்பத்திரம் பெற்றுக் கொள்ளலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்கப்பத்திரம் தனிநபர் ஒருவர் ஒரு நிதி ஆண்டில் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை தங்கபத்திரமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு காலம் 8 வருடம். தேவைப்படின் 5 வருடங்களில் விலக்கி கொள்ளும் வசதியும் உள்ளது. ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி 6 மாதத்துக்கு ஒருமுறை பெற்றுக் கொள்ளலாம். முதிர்வு தொகை 24 கேரட் தங்கத்துக்கு ஈடாக அப்போதைய தங்கத்தின் மதிப்புக்கு பெற்றுக் கொள்ளலாம்.

தங்கப்பத்திரம் சேமிப்பு திட்டம் தொடர்பாக உதவிக்கு கீழ்க்கண்ட தபால் வணிக உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம். முதலீடு செய்ய மிகவும் திட்டமாக நிதி வல்லுனர்களால் கணிக்கப்பட்டுள்ள தங்கப்பதிரம் சேமிப்பு திட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து பயன் பெறலாம்.” இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.