Home செய்திகள் சமத்துவ மக்கள் கட்சியை பாஜக உடன் இணைத்து விட்டார் சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சியை பாஜக உடன் இணைத்து விட்டார் சரத்குமார்

0
சமத்துவ மக்கள் கட்சியை பாஜக உடன் இணைத்து விட்டார் சரத்குமார்
Sarathkumar merged the Samadwa Makkal katchi with the BJP

சமத்துவ மக்கள் கட்சியை பாஜக உடன் இணைத்து விட்டார் சரத்குமார்

Sarathkumar merged the Samadwa Makkal katchi with the BJP

  • வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும் நன்மைக்காகவும் பாஜகவில் கட்சியை இணைத்துள்ளதாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

  • கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியுடன் கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக கூறினார் சரத்குமார்.

சென்னை, மார்ச். 12

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்துள்ளார் சரத்குமார். வலிமையான ஆட்சி, வலிமையான அரசு அமைய இணைந்து பயணிப்போம் பாடுபடுவோம் என்று கூறியுள்ளார் சரத்குமார். வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும் நன்மைக்காகவும் பாஜகவில் கட்சியை இணைத்துள்ளதாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சரத்குமார் தனது ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தார். பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். பின்னர் அவர் அதிமுகவிலிருந்து விலகி 2007ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார்.

இதுவரை பல சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்றிருந்தாலும் அதிமுக கூட்டணியில்தான் பலமுறை தேர்தலை சந்தித்துள்ளார் சரத்குமார். தேர்தலுக்கு முன்பாக தனித்து போட்டி தனிச்சின்னம் என்று தொண்டர்கள் மத்தியில் பேசினாலும் கடைசியில் அதிமுக கூட்டணியில்தான் போட்டியிடுவார்.

கடந்த 2011, 2016 சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த சமத்துவ மக்கள் கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. சரத்குமார் 2011ஆம் ஆண்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக சட்டசபைக்குள் நுழைந்தார். 2016ஆம் ஆண்டு திருச்செந்தூர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட சரத்குமார் தோல்வியடைந்தார்.

இதையும் படியுங்கள் : புதுச்சேரியில் மகளிர் தின விழா: சிறந்து விளங்கும் 110 மகளிருக்கு ‘சிங்கப்பெண் விருது’ -கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் வழங்கியது

சினிமாவில் சீனியராக இருந்தாலும் அரசியலில் தன்னை விட பல ஆண்டுகள் ஜூனியரான கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியுடன் கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக கூறினார் சரத்குமார்.

இந்த நிலையில் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜக உடன் இணைத்து விட்டார். வலிமையான ஆட்சி, வலிமையான அரசு அமைய இணைந்து பயணிப்போம் பாடுபடுவோம் என்று கூறியுள்ளார் சரத்குமார். வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும் நன்மைக்காகவும் பாஜகவில் கட்சியை இணைத்துள்ளதாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்