கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு ; கல்லூரி முதல்வரை சிறை படுத்தி முற்றுகை போராட்டம்
sexual harassment of girls in kalashetra the college principal was jailed and siege protested
-
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
-
மாணவிகள் முன்னிலையில் கல்லூரி முதல்வரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தை நடத்தியும் மாணவிகள் கலைந்து செல்ல மறுப்பதால் கலாஷேத்ராவில் பரபரப்பு
சென்னை, மார்ச்.31
அடையாறில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம்
மேலும், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் மாணவிகள் குரல் கொடுத்து வருகின்றனர். இதைதொடர்ந்து, மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டத்தை அடுத்து கலாஷேத்ரா கல்லூரியை வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளது.
மேலும், கல்லூரி விடுதியில் உள்ள அனைத்து மாணவர்களும் 2 நாட்களுக்குள் காலி செய்யவும் உத்தரவிட்டுள்ளது. திடீரென விடுதிகளை காலி செய்யுமாறு கூறினால் எங்கு செல்வது என்று மாணவிகள் ஆதங்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளனர்.
போலீசார் பேச்சுவார்த்தை
இதையடுத்து, கல்லூரி முதல்வர் உள்ளிட்டோரை வெளியேறவிடாமல் முற்றுகையிட்டு மாணவர்கள் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். மாணவிகள் முன்னிலையில் கல்லூரி முதல்வரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தை நடத்தியும் மாணவிகள் கலைந்து செல்ல மறுப்பதால் கலாஷேத்ராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.