ரஷ்யாவில் துப்பாக்கிச் சூடு : உக்ரைனுக்கு எந்த தொடர்பும் இல்லை – அமெரிக்கா
Shooting in Russia : Ukraine had Nothing to do – US
-
உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் இன்னும் முடியாத நிலையில், இது சர்வதேச வர்த்தகத்தையும், பொருளாதாரத்தையும் பாதித்துள்ள வேளையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மீண்டும் சர்வதேச பிரச்சனையாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மாஸ்கோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சில மணிநேரங்களில், தாக்குதலில் உக்ரைனியர்கள் ஈடுபட்டிருப்பதற்கான தகவல்களை அமெரிக்கா மறைத்து வைப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
மாஸ்கோ. மார்ச். 23
மாஸ்கோ நகரின் மேற்குப் பகுதியில் உள்ள கிரோகஸ் சிட்டி ஹால் எனும் கச்சேரி அரங்கில், போர் உடையில் வந்த ஆயுதம் ஏந்திய குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த துயர சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 145க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்து சில நாட்களே ஆன நிலையில் 71 வயதான விளாடிமிர் புதின் மீண்டும் அந்நாட்டின் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு பெரிய அளவில் கொண்டாடப்பட்ட நிலையில், தற்போது தலைநகர் மாஸ்கோவில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் இன்னும் முடியாத நிலையில், இது சர்வதேச வர்த்தகத்தையும், பொருளாதாரத்தையும் பாதித்துள்ள வேளையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மீண்டும் சர்வதேச பிரச்சனையாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்தடுத்து அமெரிக்கா, இந்தியா போன்ற முன்னணி பொருளாதார நாடுகளில் தேர்தல் நடக்கும் வேளையில், உக்ரைன்- ரஷ்யாவின் போர் முதலீட்டுச் சந்தையில் மீண்டும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது, அமெரிக்க பங்குச்சந்தையில் டாவ் ஜோன்ஸ் மற்றும் எஸ் அண்ட் பி 500 குறியீடுகள் சரிந்து காணப்படுகிறது. தங்கம் விலையில் சிறு தடுமாற்றமும் ஏற்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள் : மக்களவைத் தேர்தல்: விருதுநகர் தொகுதியில் மறைந்த விஜயகாந்தின் மகன் வி.விஜயபிரபாகரன் போட்டி
ரஷ்ய செய்தித் தகவல்களின்படி, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் வெடிமருந்துகளை வீசி கட்டிடத்தில் பெரும் தீ விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். தாக்குதல் நடந்த கிரோகஸ் சிட்டி ஹால் மாஸ்கோ நகரின் மேற்கு எல்லையில் அமைந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளிகளில், கட்டிடத்தின் மீது கரும்புகை மண்டலங்கள் பரவி இருப்பதைக் காண முடிகிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாஸ்கோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சில மணிநேரங்களில், தாக்குதலில் உக்ரைனியர்கள் ஈடுபட்டிருப்பதற்கான தகவல்களை அமெரிக்கா மறைத்து வைப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கர்பி, செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “உக்ரைன் அல்லது உக்ரைனியர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருந்தனர் என்பதற்கான எந்த தகவலும் தற்போது இல்லை. இத்தகைய குற்றச்சாட்டுகளை ஆரம்ப கட்டத்திலேயே நான் மறுக்கிறேன், இந்த தாக்குதலில் உக்ரைன் உடன் எந்தத் தொடர்பும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மாஸ்கோவில் நடந்த இந்த தாக்குதலுக்கும் உக்ரைனுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், ரஷ்யாவின் குற்றச்சாட்டுப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. மேலும் ரஷ்யா இதைத் தீவிரவாத தாக்குதல் என்றும் குறிப்பிட்டு உள்ளது.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கர்பி பேச்சுக்கு பின்பு, ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரின் டிவிட்டர் பதிவு கூடுதல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்