Home செய்திகள் திமுகவினர் வாய்க்கு பூட்டுப்போடுங்கள்| உதயநிதியிடம் உளவுத்துறை எச்சரிக்கை

திமுகவினர் வாய்க்கு பூட்டுப்போடுங்கள்| உதயநிதியிடம் உளவுத்துறை எச்சரிக்கை

0
திமுகவினர் வாய்க்கு பூட்டுப்போடுங்கள்| உதயநிதியிடம் உளவுத்துறை எச்சரிக்கை

திமுகவினர் வாய்க்கு பூட்டுப்போடுங்கள்| உதயநிதியிடம் உளவுத்துறை எச்சரிக்கை

Shut up DMK people | Intelligence department alert to Udayanidhi

  • ஒரு இன மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவது தேவையற்ற எதிர்வினைகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தும் ” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறது.

  • நாகாலாந்து மக்கள் நாய்கறி உண்பது அவர்களின் கலாச்சாரம் என்பதனை கௌஹாத்தி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உறுதி செய்துள்ளது” என்று ஆர் எஸ் பாரதி பதிவிட்டுள்ளார்.

சென்னை, நவ. 06

திமுகவினர் வாய்க்கு பூட்டுப்போடுங்கள்| உதயநிதியிடம் உளவுத்துறை எச்சரிக்கை : நாகா இன மக்களை ஆர்.எஸ்.பாரதி கொச்சைப்படுத்திய விவகாரம் ஸ்டாலினை மிகவும் அப்-செட்டாக்கியிருக்கிறதாம். கடும் காய்ச்சலில் ஓய்வு எடுத்து வரும் சூழலிலும், பாரதியை தொடர்புகொண்டு மிக கோபமாக கண்டித்திருக்கிறார் ஸ்டாலின்.

governor rn ravi

திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி, கருணாநிதி நூற்றாண்டு விழா கூட்டம் ஒன்றில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்து பேசினார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசை வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பதாகவும், தொல்லை கொடுப்பதற்கென்றே செயல்படுவதாகவும், தமிழ்நாடு அரசு அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போடுவதாகவும் குற்றம் சாட்டினார்.

அந்த விழாவில், பேச்சாளர்களின் பேச்சுக்களை குறிப்பெடுத்துக் கொண்டிருந்த மாநில உளவுத்துறையினர், ஆர்.எஸ்.பாரதியின் பேச்சை அப்படியே முழுமையாக ஆடியோ, வீடியோவாக மாநில உளவுத்துறை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த வீடியோ, ஆடியோ நோட்ஸ், உளவுத்துறை ஐ.ஜி.செந்தில் வேலனின் பார்வைக்கு போனது. அதனை கேட்டு ஆடிப்போய்விட்டார் அவர். ஏற்கனவே, பாரதியின் பேச்சால் பல சர்ச்சைகள் இருக்கிறது.

இதில் இது வேறயா? ஒரு இனத்தை கொச்சைப் படுத்தியிருக்கிறார். இதில் என்னென்ன சர்ச்சை உருவாக்குமோ என அதிர்ச்சியடைந்த உளவுத்துறை, “நாகா இனமக்களைப் பற்றி பேசியுள்ள விசயங்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு இன மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவது தேவையற்ற எதிர்வினைகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தும் ” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறது.

இதை அறிந்த உளவுத்துறை, கவர்னரின் ‘எக்ஸ்’ ஸ்டேட்மெண்ட்டையும் முதல்வரின் கவனத்துக்கு அனுப்பியதோடு, பாரதியின் பேச்சை அரசியலாக்க பாஜக திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்திருக்கிறதாம். இதற்கிடையே, உதயநிதியை தொடர்புகொண்டு பேசிய முதல்வர் அலுவலக அதிகாரிகள், ” தேர்தல் நேரம் இது. திமுகவினர் வாய்க்கு பூட்டுப்போடுங்கள்.

இதையும் படியுங்கள் : நம்ம ஊரு, நம்ம பள்ளி திட்டம் | பாராட்டிய முன்னாள் கேரள ஆளுநர் பி.சதாசிவம்

சர்ச்சைக்குரிய பேச்சுக்களையும், மரியாதைக்குறைவாக பேசுவதையும் தடை போடுங்கள். இல்லைன்னா சர்ச்சைகளை சமாளிக்கவே நேரம் இருக்காது” என்று சொல்லியிருக்கிறார்கள். இதனை முதல்வரிடம் தெரிவித்துள்ளார் உதயநிதி. இதனையடுத்துதான் ஆர்.எஸ்.பாரதியை தொடர்புகொண்டு கண்டித்துள்ளார் என்கிறார்கள் திமுக மேலிட தொடர்பாளர்கள்.

இது தொடர்பாக ஆர் எஸ் பாரதி தற்போது விளக்கமும் அளித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நாகாலாந்து மக்களை நான் இழிவுப்படுத்தியதாக ஆளுநர் ரவி கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி. நாகாலாந்து மக்கள் நாய்கறி உண்பது அவர்களின் கலாச்சாரம் என்பதனை கௌஹாத்தி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உறுதி செய்துள்ளது” என்று ஆர் எஸ் பாரதி பதிவிட்டுள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.