
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு 2 ஆம் ஆண்டு மாநாடு : புதிய நிர்வாகிகள் தேர்வு
Sivagangai District of Tamil Nadu Minority People’s Welfare Committee Second year Conference
-
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழுவின் புதிய மாவட்ட தலைவராக, ஹாஜி. NM.ஹுசைன் (NMH) தேர்வு
-
அழகு சித்தார்த், கண்ணன் DSP rdt, பரிசுத்தம், இக்னேஷ், சாமி நாதன், ஆல்பர்ட் ராஜேந்திரன், சாகுல் நூர் முகம்மது, சீனிவாசன், மதிவாணன் நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்வு
காரைக்குடி, ஜன. 09
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு 2 ஆம் ஆண்டு மாநாடு : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த சனிக்கிழமை (ஜன. 06) அன்று, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழுவின் சிவகங்கை மாவட்ட 2ஆம் ஆண்டு மாநாடு ஆனந்த மடம் ஹாலில் சிறப்பாக நடைபெற்றது.

மாநாட்டில் 50 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு இரா.வேணுகோபால் தலைமை ஏற்றார். தேனி நாகராஜன் துவக்க உரையாற்றினார்.
இதையும் படியுங்கள் : டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் BC, SC வகுப்பினரின் வயது உச்ச வரம்பை 49 ஆக உயர்த்த வேண்டும் – முதல்வர் ஸ்டாலினுக்கு காங். தலைவர் ஹிதாயத்துல்லா கோரிக்கை
மாநாட்டில் சிபிஐஎம் தோழர் கருப்புசாமி, மானுட தோழமை இயக்க அமைப்பாளர் ஹாஜி. N.M. ஹுசைன் (NMH), ஐந்திணை மக்கள் இயக்கம் ஸ்டீபன் ராஜ், மாவட்ட ஐக்கிய ஜமாத் செயலாளர் ஹாஜி. கலீல் ரகுமான், பாஸ்டர் சகாயராஜ், இ.யூ.முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹாஜி.ஹைதர் அலி அம்பலம், சாக்கிய புத்தகம் தலைவர் அழகு சித்தார்த், யூ.சேவியர், தாமஸ் சேவியர் ஆகியோர் உரையாற்றினர்.
புதிய மாவட்ட தலைவராக, ஹாஜி. NM.ஹுசைன் (NMH)
தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்ட செயலாளராக இரா.வேணுகோபால், மாவட்ட பொருளாளராக யூ.சேவியர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிர்வாக குழு உறுப்பினர்களாக அழகு சித்தார்த், கண்ணன் DSP rdt, பரிசுத்தம், இக்னேஷ், சாமி நாதன், ஆல்பர்ட் ராஜேந்திரன், சாகுல் நூர் முகம்மது, சீனிவாசன், மதிவாணன் தேர்வு செய்யப்பட்டனர். இரா.வேணுகோபால் நன்றியுறை ஆற்றினார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்