Home இந்தியா பத்திரிகையாளர், எழுத்தாளர் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் | கர்நாடகா முதல்வர் சித்தராமையா

பத்திரிகையாளர், எழுத்தாளர் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் | கர்நாடகா முதல்வர் சித்தராமையா

0
பத்திரிகையாளர், எழுத்தாளர் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் | கர்நாடகா  முதல்வர் சித்தராமையா
karnataka asambly eletion

பத்திரிகையாளர், எழுத்தாளர் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் | கர்நாடகா முதல்வர் சித்தராமையா உத்தரவு 

Special court to investigate journalist, writer murder case | Karnataka Chief Minister Siddharamaiah’s order

  • இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு நடந்து வருகிறது.

  • சித்தராமையாவின் இந்த உத்தரவுக்கு கவுரி லங்கேஷின் சகோதரி கவிதா லங்கேஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதன்மூலம் குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு, டிச. 07

பத்திரிகையாளர், எழுத்தாளர் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் | கர்நாடகா முதல்வர் சித்தராமையா உத்தரவு : கர்நாடகாவில் பத்திரிகையாளர், எழுத்தாளர் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா கூறினார்.

கர்நாடகாவை சேர்ந்த முற்போக்கு எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்துத்துவ அமைப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டன‌ர். இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஆகியோரின் கொலை வழக்கை விரைந்துவிசாரிக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கைவிடுத்தனர்.

இதையும் படியுங்கள்: கரையை கடந்தது மிக்ஜாம் புயல் : தேங்கி நிற்கும் வெள்ளநீரால் மிதக்கும் வியாசர்பாடி, மேற்கு தாம்பரம்,வேளச்சேரி பகுதிகள்

அதன்பேரில் இருவரின் கொலை வழக்குகளையும் விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது”என குறிப்பிட்டுள்ளார்.

சித்தராமையாவின் இந்த உத்தரவுக்கு கவுரி லங்கேஷின் சகோதரி கவிதா லங்கேஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதன்மூலம் குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.