Home செய்திகள் உயர் அதிகாரிகளை மத்திய அரசே நியமிக்கும் முடிவை மாநில அரசுகள் எதிர்க்க வேண்டும்: ஆதரவு திரட்ட முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் கெஜ்ரிவால்

உயர் அதிகாரிகளை மத்திய அரசே நியமிக்கும் முடிவை மாநில அரசுகள் எதிர்க்க வேண்டும்: ஆதரவு திரட்ட முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் கெஜ்ரிவால்

0
உயர் அதிகாரிகளை மத்திய அரசே நியமிக்கும் முடிவை மாநில அரசுகள் எதிர்க்க வேண்டும்: ஆதரவு திரட்ட முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் கெஜ்ரிவால்

 

உயர் அதிகாரிகளை மத்திய அரசே நியமிக்கும் முடிவை மாநில அரசுகள் எதிர்க்க வேண்டும்: ஆதரவு திரட்ட முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் கெஜ்ரிவால்

State governments should oppose Center’s decision to appoint top officials: Kejriwal meets CM Stalin to garner support

  • பாஜக அரசுக்கும் டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையேயும் அதிகாரப்பகிர்வு, ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட பல விஷயங்களில் மோதல் போக்கு

  • நாடாளுமன்ற மக்களவையில் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை இருப்பதால் அங்கு அவசர சட்டத்தை எளிதாக மத்திய அரசு நிறைவேற்றும்

ஜூன். 01

டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளது என மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு டெல்லி அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன் நாடு முழுவதும் எதிர்க்கட்சி முதல்வர்கள் மற்றும் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறது.

அந்த வகையில், இன்று தமிழகம் வந்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். அவருடன், பஞ்சாப் முதல்வர் பகவந்த மான் சிங்கும் உள்ளார். இருவரையும் சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் பல்வேறு துறைகள்

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லியில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மத்திய உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் தான் உள்ளது. எனவே, மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையேயும் அதிகாரப்பகிர்வு, ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட பல விஷயங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த சூழலில், ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உட்பட மாநில அரசின் நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நீர்த்து போக செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இந்த அவசர சட்டம் நாடாளுமன்றத்திற்கு வரும் போது எதிர்ப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

ஆம் ஆத்மியின் போராட்டத்துக்கு ஆதரவு

அந்த வகையில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, சரத் பவார் ஆகியோரை சந்தித்து மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினையும் சந்தித்து ஆதரவு கோரியுள்ளார்.

இதையும் படியுங்கள்22 நாடுகளில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு – ஐ.நா. சபை

பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஓரணியில்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற பேச்சுக்கள் வலுத்துள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமையும் போது அதில் தமிழக முதல்வரின் பங்கும் பெரிய அளவில் இருக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது. எனவே இன்றைய கெஜ்ரிவாலின் சந்திப்பு தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் ஆகியோர் சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஜார்க்கண்ட் செல்கிறார்கள். அதாவது இன்று இரவு 7 மணியளவில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு கெஜ்ரிவாலும் பகவந்த் மானும் செல்கிறார்கள். ராஞ்சியில் முதல்வர் ஹேமந்த் சோரனை நாளை (வெள்ளிக்கிழமை) சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது

மாநிலங்களவை நிலை

நாடாளுமன்ற மக்களவையில் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை இருப்பதால் அங்கு அவசர சட்டத்தை எளிதாக மத்திய அரசு நிறைவேற்றும். அதே வேளையில், மாநிலங்களவையில் அந்த நிலை இல்லை. எனவே மாநிலங்களவையில் இந்த சட்டம் நிறைவேற்றப்படுவதை தடுக்க கெஜ்ரிவால் தீவிர முனைப்பு காட்டி வருகிறார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்