த.மா.கா. மாநில துணைத்தலைவர் வேணுகோபால் மறைவு ; தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல்
T.M.C State Vice President Venugopal death; President GK Vasan Condolences
-
தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் வேணுகோபால் என்கிற மாறன் உடல்நலக்குறைவால் காலமானார்
-
உடல்நிலை சரியில்லாத நிலையிலும் இயக்க உணர்வோடு த.மா.கா தலைமை அலுவலகத்திற்கு வந்து சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்
சென்னை, ஏப். 08
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் வேணுகோபால் என்கிற மாறன் உடல்நலக்குறைவால் காலமான செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.
இதையும் படியுங்கள் : பார்த்திபனின் ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் தணிக்கை சான்றிதழ் உடன் வெளியிட்டு உலக சாதனை
உடல்நிலை சரியில்லாத நிலையிலும் இயக்க உணர்வோடு த.மா.கா தலைமை அலுவலகத்திற்கு வந்து சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவரது மறைவு இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்