சவுதி அரேபியா ரியாத்தில் அசத்தலான கலைநிகழ்ச்சிகளுடன் ”தமிழ் கலாச்சார பயணம்” விழா
“Tamil Cultural Tour” Festival in Riyadh, Saudi Arabia with stunning performances
-
தமிழ் கலாச்சார பயணம் ” என்ற விழா கடந்த அக். 25 ந் தேதி மாலை ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்றது.
-
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பறையிசை, நடனம், சிலம்பம், வீணை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கில் நடைபெற்றன.
சவுதி அரேபியாவில் உள்ள இந்தியத்தூதரகம் ஆண்டுதோறும் புலம்பெயர்ந்த இந்திய மாநிலங்களின் கலாச்சார விழாவினை (Pravasi Parichay-2024) நடத்தி வருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா , கேரளா உள்ளிட்ட இந்திய மாநிலங்களின் கலாச்சார விழாக்களும் நடத்தப்படுகிறது.
தொடர்ந்து நடப்பாண்டுக்கான தமிழ்நாட்டின் சார்பாக ”தமிழ் கலாச்சார பயணம் ” என்ற விழா கடந்த அக். 25 ந் தேதி மாலை ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான சவூதி அரேபியா வாழ் தமிழர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்,” என்பதை மெய்பிக்கும்வகையில் தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பறையிசை, நடனம், சிலம்பம், வீணை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கில் நடைபெற்றன.
அரங்கின் வளாகத்தில் வழிபாட்டுதளங்கள், கலாச்சார சின்னங்கள், தமிழர் உணவு வகைகள், தமிழ் புத்தக கண்காட்சி, கைவினைப்பொருட்கள் கண்காட்சி, கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி என பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
ரியாத்தில் இயங்கி வரும் தமிழக பாரம்பரிய உணவகங்களான தம்பிஸ், சோழா, பொன்னுசாமி, கிராண்ட் லக்கி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் சமூக அமைப்புகள், பங்கேற்ற அனைவருக்கும் அறுஞ்சுவை உணவு வழங்கினர்.
”தமிழ் கலாச்சார பயணம்” விழாவில் அனைத்து தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள், தமாம், ஜித்தா தமிழ்ச்சங்க பிரதிநிதிகளும் ஒரே தமிழ் சமூகமாக கலந்துகொண்டது நிகழ்வின் சிறப்பம்சமாகும்.