தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 :
(Tamil Nadu Budget 2023-24 : Rs. 27,500 crore Coimbatore, Madurai, Chennai Metro Rail projects)
-
கோவை-அவினாசி சாலை உள்ளிட்ட இடங்களில் ரூ.9000 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
-
மதுரையில் ரூ.8500 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை, மார்ச் 20
தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம்
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டப்பணிகள் 63,246 கோடி ரூபாய் செலவில் 119 கி.மீ. தூரத்திற்கு 3 வழித்தடங்களில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதன் முதல் வழித்தடமாக, பூந்தமல்லி பணிமனை முதல் கோடம்பாக்கம் மின் நிலையப் பிரிவு வரையிலான உயர் வழித்தடம் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
இதையும் படியுங்கள் : தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 : சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக ரூ.5,346 கோடி ஒதுக்கீடு
கோவை மெட்ரோ ரெயில் திட்டம்
கோவை-அவினாசி சாலை உள்ளிட்ட இடங்களில் ரூ.9000 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
மதுரை மெட்ரோ ரெயில் திட்டம்
மதுரையில் ரூ.8500 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.