Wednesday, December 18, 2024

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் : துணை முதல்வராக உதயநிதி ; செந்தில் பாலாஜி, நாசர் உள்ளிட்ட 4 பேர் புதிதாக அமைச்சரவையில் சேர்ப்பு

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் : துணை முதல்வராக உதயநிதி ; செந்தில் பாலாஜி, நாசர் உள்ளிட்ட 4 பேர் புதிதாக அமைச்சரவையில் சேர்ப்பு

Tamil Nadu Cabinet Reshuffle: Udayanidhi as Deputy Chief Minister; Senthil Balaji, Nasser added to the cabinet

  • செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட, மனோ தங்கராஜ் உள்ளிட்ட 3 பேரின் அமைச்சர் பதவி பறிப்பு

  • ஏற்கனவே அமைச்சராக உள்ள நபர் துணை முதல்வராக நியமிக்கப்படும் போது தனியாகப் பதவியேற்க மாட்டார்கள்

சென்னை, செப். 30

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் : துணை முதல்வராக உதயநிதி ; செந்தில் பாலாஜி, நாசர் உள்ளிட்ட 4 பேர் புதிதாக அமைச்சரவையில் சேர்ப்பு : தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி  அறிவிக்கப்பட்டார். அதேபோல 4 பேர் புதிதாகவும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து  பதவியேற்பு விழா நடந்தது. இருப்பினும், இதில் துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட உதயநிதி மேடை ஏறிப் பதவியேற்கவில்லை. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று நீண்ட காலமாகவே சொல்லப்பட்டு வந்தது. அவ்வப்போது இது தொடர்பான தகவல்களும் வெளியாகும். குறிப்பாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியும் தரப்படும் என்று கூறப்பட்டது.

சமீபத்தில் இது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கூட கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மாற்றம் இருக்கும்.. ஏமாற்றம் இருக்காது என்று மட்டும் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

இந்தச் சூழலில் தான இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட, மனோ தங்கராஜ் உள்ளிட்ட 3 பேரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அதேநேரம் செந்தில் பாலாஜி, நாசர் உள்ளிட்ட 4 பேர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர்.

மேலும், சிலரது துறைகளும் மாற்றப்பட்டு இருந்தது. அதேபோல திமுக தொண்டர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உதயநிதி துணை முதல்வராக நியமிக்கும் அறிவிப்பும் அதில் இருந்தது. இது திமுகவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதன்படி செப். 29  மாலை 3.30 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட உடன் நடக்கும் முதல் பதவியேற்பு விழா. இதில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் கூட நேரடியாகக் கலந்து கொண்டனர். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த விழாவில் கோவி செழியன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அமைச்சராகப் பதவியேற்றனர். அதேநேரம் துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட உதயநிதி மேடையில் கூட ஏறவில்லை.

உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்பட்டது என்பதை நாம் ஒரு பதவி உயர்வாகப் பார்த்தாலும் நமது நாட்டின் விதி சரி மரபுபடியும் சரி துணை முதல்வர் என்பது ஒரு பொறுப்பு தானே தவிர அரசியலமைப்பு வழங்கும் பதவி இல்லை.

ஏற்கனவே அமைச்சராக உள்ள நபர் துணை முதல்வராக நியமிக்கப்படும் போது தனியாகப் பதவியேற்க மாட்டார்கள். இதன் காரணமாகவே புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு மட்டும் பதவியேற்பு விழா நடைபெற்றது.

தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இது அரசியலில் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 25 ஆண்டுகாலம் திமுகவையும், தமிழக மக்களின் நலனையும் தன்னுடைய தோளில் சுமக்கும் அளவிற்கு திடகாத்திரமிக்க உணர்வு கொண்டவர் உதயநிதி ஸ்டாலின் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

முக்கியமாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானதை, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வரவேற்று வருகின்றனர். சினிமா பிரபலங்களும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் அதிமுக, நாம்தமிழர், பாஜக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை வாரிசு அரசியல் என்று தெரிவித்து வருகின்றனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles