
பாஜக அரசு இந்திய மக்களை அச்சுறுத்துகிறது -அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு
the BJP is threatening people and misusing government agencies – raghul gandhi speech in america
-
நாட்டின் தெற்குமூலையான கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீநகர் வரை நடைபயணம்
-
‘உண்மையான ஜனநாயகம்’ குறித்த பார்வைகள் மற்றும் பகிரப்பட்ட மதிப்பீடுகள் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கம்
சான் ஃபிரான்சிஸ்கோ, மே. 31
இந்தியாவில் மக்களை அச்சுறுத்தக்கூடியதாக பாஜக அரசு உள்ளது என்று அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரின், சான்டா க்ளாராவில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது, “பாஜக அரசு அனைத்து மக்களையும் அச்சுறுத்துகிறது. அரசு நிறுவனங்களைத் தவறான வழியில் பயன்படுத்துகிறது. மக்களைத் தொடர்பு கொள்ளக்கூடிய அரசின் அனைத்து அமைப்புகளையும் பாஜகவும் ஆர்எஸ்எஸும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அதானால்தான் இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதையும் படியுங்கள் : சிங்கப்பூர், ஜப்பான் அரசு முறைப் பயணம் முடித்து சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் :13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1258.90 கோடி முதலீடு
இந்தியாவில் அரசியல் ரீதியாக செயல்படுவது ஏதோ ஒருவகையில் கடினாமாகி விட்டது. அதன் காரணமாகவே, நாட்டின் தெற்குமூலையான கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீநகர் வரை நடைபயணம் மேற்கொள்வது என்று தீர்மானித்தேன். வரலாற்றைப் படிக்கும்போது, குருநானக் தேவ், குரு பசவண்ணா, நாராயண குரு போன்ற மதத்தலைவர்கள் அனைவருமே தேசத்தை ஒரே மாதிரி ஒருங்கிணைத்தை அறியமுடியும்.
இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது எனக்கு ஒன்று புரிந்தது. பாஜகவுக்கு உதவுவதற்காக ஊடகங்கள் சில விஷயங்களை எடுத்துக்காட்ட முயல்வது தெரிந்தது. எனவே, ஊடகங்களில் காட்டப்படும் அனைத்தையும் உண்மை என்று நம்பிவிட வேண்டாம். இந்தியா என்பது ஊடகங்களால் காட்டப்படுவது மட்டும் இல்லை. ஊடகங்கள் ஒருகுறிப்பிட்ட கதையைக் கட்டமைக்க விரும்புகின்றன. அவை இந்தியாவில் நடைமுறையில் இல்லாத கதையை கட்டமைக்க விரும்புகின்றன” என ராகுல் காந்தி தெரிவித்தார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.