Thursday, December 19, 2024

பேசியதில் தவறு இருந்திருந்தால் நானே நீக்க சொல்லிருப்பேன்” -முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


 

பேசியதில் தவறு இருந்திருந்தால் நானே நீக்க சொல்லிருப்பேன்” -முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

There was nothing wrong what udhayanithi said, if it is i would have asked to remove – chief minister mk stalin

 

  • அமித்ஷாவின் பெயரை அவை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தினார்.

  • பாஜகவின் கோரிக்கையை அவைத்தலைவர் நிராகரித்ததையடுத்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

சென்னை, ஏப்.13

ஐபிஎல் டிக்கெட் விவகாரத்தில் அமித்ஷா மகன் ஜெய்ஷா டிக்கெட் வைத்து இருக்கிறார் என கிண்டலாக சில விஷயங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார் என்றும் அவர் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அவை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தல்

தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்துவதே உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் என்று பேசி இருந்தார். இது தொடர்பாக சட்டசபையில் இன்று நயினார் நாகேந்திரன் (பா.ஜனதா) பிரச்சினை எழுப்பினார். அமித்ஷாவின் பெயரை அவை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தினார். அமித்ஷா என்று பெயர் சொல்லி கூறியிருக்கிறார். எனவே அவை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தினார்.

இதையும் படியுங்கள்தமிழ் மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி

பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

பாஜகவின் கோரிக்கையை அவைத்தலைவர் நிராகரித்ததையடுத்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், இது குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

“சட்டசபையில் அமித்ஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்த தவறும் இல்லை. அமித்ஷா பெயரை குறிப்பிட்டது என்ன தகாத வார்த்தையா?. விமர்சனம், கேலி செய்தோ அமைச்சர் பேசவில்லை, திரு என்று சொல்லி தான் பேசியுள்ளார். அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. பேசியதில் தவறு இருந்திருந்தால் அவை குறிப்பில் இருந்து நானே நீக்க சொல்லிருப்பேன்” என்று  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles