
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம்: 2024-25 நிதியாண்டில் 3.73 டன் சமையல் எண்ணெய் கையாண்டு சாதனை
Thoothukudi V.O. Chidambaranar Port handles record 3.73 tonnes of cooking oil in 2024-25
-
துறைமுகத்தின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், சுமூகமாக வர்த்தகத்தை எளிதாக்கவும் சிறந்த முறையில் செயல்பட்டு வரும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சமையல் எண்ணெய் கையாளுவதலில் வியக்கத்தக்க வளர்ச்சி
-
தென்கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரியகாந்தி எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு, சேமிக்கப்பட்டு அதன் பிறகு தென்னிந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு விநியோகம்
மதுரை, ஜன. 16
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2024-25 நிதியாண்டில் 3,73,393 டன் சமையல் எண்ணெய் கையாண்டு சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-
இந்தியாவின் முன்னணி துறைமுகங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நிலக்கரி, சரக்கு பெட்டகங்கள், சுண்ணாம்புக் கல், காற்றாலை இறகு மற்றும் அதன் உதிரிபாகங்கள், உரம், கட்டுமான பொருட்கள், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் ஆகிய சரக்குகளை சிறந்த முறையில் கையாண்டு வருகிறது.
துறைமுகத்தின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், சுமூகமாக வர்த்தகத்தை எளிதாக்கவும் சிறந்த முறையில் செயல்பட்டு வரும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சமையல் எண்ணெய் கையாளுவதலில் வியக்கத்தக்க வளர்ச்சியைப் பெற வழிவகுத்துள்ளது.
வ.உ.சிதம்பரனார் துறைமுகம் இந்த நிதியாண்டு 2024-25 டிசம்பர் வரை 3,73,393 டன் சமையல் எண்ணெயை கையாண்டு (இதில் 2,97,132 டன் பாமாயில் மற்றும் 76,261 டன் சூரியகாந்தி எண்ணெய்
அடங்கும்) இதற்கு முந்தைய நிதியாண்டு 2023-24 டிசம்பர் 2023 வரை கையாண்ட அளவான 3,09,229 டன்களை ஒப்பிடுகையில் 20.75 சதவிகிதம் அதிகமாக கையாண்டு சாதனை படைத்துள்ளது.
இதையும் படியுங்கள் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி நாராயணன் பொறுப்பேற்பு
மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழிபோக்குவரத்து அமைச்சகத்தின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலுள்ள கடலோர அபிவிருத்தி திட்டத்தின் மூலம் துறைமுகம் பல்வேறு துறைமுகம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைப்பதற்கு தேவையான நிலங்களை வழங்கி வருகிறது.
இவற்றில் பயனாளிகளில் ஒன்றான Kaleesuwari Agro Industries Private Limited என்னும் நிறுவனத்திற்கு சுத்திகரிப்பு ஆலை மற்றும் சேமிப்பு தொட்டி அமைப்பதற்காக நிலம் ஒதுக்கியுள்ளது. இந்த வளாகத்தில் தென்கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரியகாந்தி எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு, சேமிக்கப்பட்டு அதன் பிறகு தென்னிந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது. இது இந்த பிராந்தியத்திற்கு நிலையான சமையல் எண்ணெய் விநியோகத்தினை உறுதி செய்கிறது.
மேலும், வ.உ.சிதம்பரனார் துறைமுகமானது K.T.V. Health Food Pvt. Ltd. என்னும் நிறுவனத்திற்கு கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் எண்ணெயை சேமிப்பதற்காக நிலம் வழங்கியுள்ளது. இந்தோனேஷியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு சேமிக்கப்படும் பாமாயில் சுத்திகரிப்புப் பணிக்காக தூத்துக்குடியிலுள்ள SIPCOT-ல் அமைந்துள்ள அவர்களது சுத்திகரிப்பு ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் எண்ணெய் உள்நாட்டு பயன்பாட்டிற்காக விநியோகிப்படுகிறது.
இச்சாதனை துறைமுக உபயோகிப்பாளர்கள் துறைமுகத்தின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், துறைமுக ஊழியர்களின் சிறப்பான செயல்பாட்டிற்கும் ஒரு எடுத்துகாட்டாக விளங்குகிறது. மேலும்,
துறைமுகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் சீர்மிகு போக்குவரத்து இணைப்புகள் இத்தகைய சாதனைகள் புரிவதற்கு வழிவகுக்கின்றன என்று வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோகித் கூறினார்.
மேற்கண்ட தகவலை வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்