ஓட்டாவா, பிப். 28
கனடா நாட்டில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கபட்டு உள்ளது. இது தொடர்பாக கருவூல வாரிய தலைவர் மோனாபோர்டியர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்கள் மற்றும் ஐரோப்பியாவில் உள்ள மாகாணங்களில் அதிகார பூர்வ மின்னனு சாதனங்களில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள் : வடகொரியாவில் கடும் உணவு பஞ்சம்
இதையடுத்து கனடா நாட்டிலும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு இன்று (28-ந்தேதி ) முதல் அமலுக்கு வந்துள்ளது.
கனடாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் டிக்-டாக் செயலிக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
கனடா அரசால் வழங்கப்பட்டள்ள மின்னணு சாதனங்களில் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தினால் அந்த செயலி அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.