தனியார் பள்ளிகளுக்கு 2021-22-ம் கல்வியாண்டில் வழங்க வேண்டிய கல்விக் கட்டண நிலுவைத் தொகைரூ.364.43 கோடிக்கான நிதியை தமிழக அரசு தற்போது ஒதுக்கீடு
அரசாணையை பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார். இதன்மூலம் 3.98 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவர். இதுதவிர நடப்புகல்வியாண்டுக்கான (2022-23) கல்விக் கட்டண நிலுவைத் தொகையும் விரைந்து வழங்கப்பட உள்ளது.
சென்னை, மார்ச். 03
தனியார் பள்ளிகளுக்கு 2021-22-ம் கல்வியாண்டில் வழங்க வேண்டிய கல்விக் கட்டண நிலுவைத் தொகை ரூ.364 கோடியை தமிழக அரசு விடுவித்துள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைசட்டத்தின்படி 8 ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் 3.98லட்சம் குழந்தைகள் படித்துவருகின்றனர். இவர்களுக்கான கல்விக் கட்டணம் தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில் தரப்படும்.
இதையும் படியுங்கள் : ஜி20 வெளியுறவு மந்திரிகள் கூட்டம் : அமெரிக்க, சீனமந்திரிகளை சந்தித்தார் இந்திய மந்திரி
இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கான கல்விக் கட்டண நிலுவையை துரிதமாக வழங்க வேண்டுமென தமிழகஅரசுக்கு தனியார் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கைவிடுத்திருந்தனர். அதையேற்று தனியார் பள்ளிகளுக்கு 2021-22-ம் கல்வியாண்டில் வழங்க வேண்டிய கல்விக் கட்டண நிலுவைத் தொகை ரூ.364.43 கோடிக்கான நிதியை தமிழக அரசு தற்போது ஒதுக்கீடு செய்துள்ளது.
இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார். இதன்மூலம் 3.98 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவர். இது தவிர நடப்பு கல்வியாண்டுக்கான (2022-23) கல்விக் கட்டண நிலுவைத் தொகையும் விரைந்து வழங்கப்பட உள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.