Home செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் BC, SC வகுப்பினரின் வயது உச்ச வரம்பை 49 ஆக உயர்த்த வேண்டும் – முதல்வர் ஸ்டாலினுக்கு காங். தலைவர் ஹிதாயத்துல்லா கோரிக்கை

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் BC, SC வகுப்பினரின் வயது உச்ச வரம்பை 49 ஆக உயர்த்த வேண்டும் – முதல்வர் ஸ்டாலினுக்கு காங். தலைவர் ஹிதாயத்துல்லா கோரிக்கை

0
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் BC, SC  வகுப்பினரின் வயது உச்ச வரம்பை  49 ஆக உயர்த்த வேண்டும் – முதல்வர் ஸ்டாலினுக்கு காங். தலைவர் ஹிதாயத்துல்லா கோரிக்கை

டி என். பி.எஸ்.ஸி. தேர்வு எழுதும் BC, SC வகுப்பினரின் வயது உச்ச வரம்பை 49 ஆக உயர்த்த வேண்டும் – முதல்வர் ஸ்டாலினுக்கு காங.தலைவர் ஹிதாயத்துல்லா கோரிக்கை

TNPSC examiners of BC, SC age limit should hike as 49- Congress Leader Idhayadullah request s to Chief minister MK Stalin

  • தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதுபவர்களில் பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – சீர்மரபினர் ( BC, SC) வகுப்பினரின் வயது உச்ச வரம்பு 39ஆக உள்ளது.

  • புதுச்சேரி மாநில அரசு நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்களுக்கு ஆணையம் வழங்கிய 10% இடஒதுக்கீட்டை அமல் படுத்தியுள்ளது. அதே போல் தமிழக அரசும் 7.5% இருந்து 10% மாக உயர்த்தும் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வரவேண்டும்.

சென்னை, ஜன.5

டி என். பி.எஸ்.ஸி. தேர்வு எழுதும் BC, SC வகுப்பினரின் வயது உச்ச வரம்பை 49 ஆக உயர்த்த வேண்டும் – முதல்வர் ஸ்டாலினுக்கு காங.தலைவர் ஹிதாயத்துல்லா கோரிக்கை ; தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை எழுதும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் வயது உச்ச வரம்பை பிற மாநிலங்களில் உள்ளது போல் 45 முதல் 49 வயதாக மாற்றி சமூக நீதி காக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் துணை தலைவர் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதுபவர்களில் பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – சீர்மரபினர் ( BC, SC) வகுப்பினரின் வயது உச்ச வரம்பு 39ஆக உள்ளது.

கடந்த 2021,2023 ஆண்டுகளில் தேர்வு நடைபெறாத காரணத்தால் 38 மற்றும் 39 வயதுடையவர்கள் தங்களது வயது வரம்பை கடந்து விட்டார்கள்.. ஆகையால் வயது உச்ச வரம்பை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி மாநில அரசு நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்களுக்கு ஆணையம் வழங்கிய 10% இடஒதுக்கீட்டை அமல் படுத்தியுள்ளது. அதே போல் தமிழக அரசும் 7.5% இருந்து 10% மாக உயர்த்தும் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வரவேண்டும். (கடந்த 3 வருடமாக இழந்த 400 மருத்துவ இடங்களை சரிசெய்யும் வகையில்) மீதி உள்ள 5% இடஒதுக்கீட்டை அரசு பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கிட வேண்டும்.

சமூக நீதி, திராவிட மாடல் அரசுக்கு எதிர் காலத்தில் புகார் மற்றும் குந்தகம் ஏற்படாத வகையில் மணல், கிரானைட், தாது‌மணல் ஆகியவற்றை டாஸ்மாக் போன்று அரசே நேரிடையாக விற்பனை செய்து, வேலை வாய்ப்பையும் அரசுக்கு வருவாயையும் பெருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள் : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் : ஜனவரி 10ஆம் தேதி முதல் மேலும் 2 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன் பெறுவர்

இதே போன்று பிற மாநிலங்களை போல தமிழ் நாடு அரசின் ஹஜ் இல்லம் உருவாக்க வேண்டும். விமான நிலையம் அருகில் அல்லது வக்பு வாரிய இடத்தில் ஹஜ் இல்லம் கட்ட வேண்டும். இதற்கு நிதி வழங்க ஒன்றிய ஹஜ் கமிட்டி தயாராக உள்ளது.

தமிழகத்தில் நீண்ட கால சிறைவாசிகள் விடுதலைக்கு ஆளுநர் உத்தரவுக்கு காத்திருக்கின்றனர். உத்தரவு வரும் வரை பேரறிவாளன் உள்பட 6 பேருக்கு வழங்கியது போல் நீண்ட கால சிறை வாசிகளுக்கும் பரோல் வழங்க வேண்டும்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் , இஸ்லாமியர்களுக்கு பல கலை கல்லூரிகள் உருவாக்க உதவினார். அதே போன்று இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் கடையநல்லூரில் வக்பு வாரிய இடத்தில் புதிய கல்லூரி தொடங்க உதவ வேண்டும்.

இவ்வாறு முதல்வர் முக ஸ்டாலினுக்கு எஸ். எம்.ஹிதாயத்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்