இஸ்ரேல் பணயக்கைதிகளை காசா உடனே விடுவிக்க வேண்டும் – டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு காலக்கெடு
Trump gives Hamas deadline for immediately release of Israeli hostages
-
காசா மீதான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நேரடியாக இஸ்ரேல் போரில் அமெரிக்கா நேரடியாக தலையிடுகிறதா? டிரம்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
-
பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் மனித குலத்துக்கு எதிரான இந்த அட்டூழியங்களுக்கு பொறுப்பாக மோசமான விளைவை சந்திக்க நேரிடும்”
வாஷிங்டன், டிச.03
இஸ்ரேல் நாட்டின் பணயக்கைதிகளை காசா உடனே விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு காலக்கெடு கொடுத்துள்ளார். இதை செய்யாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கையும் செய்துள்ளார். இதற்கிடையே தான் காசா மீதான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நேரடியாக இஸ்ரேல் போரில் அமெரிக்கா நேரடியாக தலையிடுகிறதா? டிரம்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா நகரில் இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் வரை கொல்லப்பட்டனர். அதோடு இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் அந்த நாட்டை சேர்ந்த 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதில் 150 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 100 பேர் காசா நகரில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை மீட்க இஸ்ரேல் முயற்சித்து வருகிறது. ஆனால் இந்த அந்த முயற்சி என்பது வெற்றி பெறவில்லை.
இதற்கிடையே தான் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் ஹமாசுக்கு கடும் எச்சரிக்கை செய்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: நான் 2025 ஜனவரி 20ம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளேன். அதற்கு முன்பாக பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் மனித குலத்துக்கு எதிரான இந்த அட்டூழியங்களுக்கு பொறுப்பாக மோசமான விளைவை சந்திக்க நேரிடும்” என்று கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள் : ஃபெஞ்சல் புயல், மழை பாதிப்புகளை அரசு திறமையோடு கையாண்டு வருகிறது – தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
டொனால்ட் டிரம்பின் இந்த எச்சரிக்கை என்பது இஸ்ரேல் – அமெரிக்க குடியுரிமை பெற்ற ஓமர் நியூட்ரா என்பவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பிறகு அடுத்த சில மணிநேரங்களில் வெளிவந்துள்ளது. இவரது உடல் காசாவில் ஹமாஸ் அமைப்பினரிடம் இருப்பதாக இஸ்ரேல் அரசு அறிவித்ததை தொடர்ந்து தான் டொனால்ட் டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். டொனால்ட் டிரம்பின் இந்த பதிவு என்பது தற்போது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அதாவது டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக 2025 ஜனவரி 20ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். அன்றைய தினத்தை குறிப்பிட்டு தான் தற்போது அவர் எச்சரிக்கை செய்துள்ளார். இதனால் அதோடு ஒருவேளை பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால் இஸ்ரேல் – காசா போரில் அமெரிக்கா நேரடியாக தலையிட உள்ளதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கும். இது காசா மக்களுக்கும், ஹமாஸ் அமபை்புக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.
ஏனென்றால் போர் நிறுத்தத்துக்காக டொனால்ட் டிரம்ப் எந்த எல்லைக்கும் செல்லலாம் என்று கூறப்படுகிறது. அதாவது அமெரிக்காவை பொறுத்தவரை ஒருவர் 2 முறை மட்டுமே அமெரிக்க அதிபராக இருக்க முடியும். ஏற்கனவே டிரம்ப் ஒருமுறை அதிபராகிவிட்டார். தற்போது அவர் 2வது முறையாக அதிபராக உள்ளார்.இதனால் இந்த முறை அவர் அமெரிக்கா மற்றும் தனது தனிப்பட்ட செல்வாக்கை உயர்த்தும் வகையில் அதிரடியாக செயல்படலாம் என்றே சொல்லப்படுகிறது.
அதோடு இஸ்ரேல் – காசா போரில் தொடக்கம் முதலே அமெரிக்கா , இஸ்ரேல் பக்கம் தான் உள்ளது. இஸ்ரேலை போல் அமெரிக்காவும் ஹமாஸ் அமைப்பினரை பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியலில் தான் வைத்துள்ளது. இதனால் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் அது ஹமாஸ் அமைப்புக்கு பெரும் சிக்கலாக மாறலாம் என்றே சொல்லப்படுகிறது.
இதனால் டொனால்ட் டிரம்ப் இந்த விஷயத்தில் எத்தகைய முடிவு எடுக்கப்போகிறார்? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒருவேளை இது நடக்கும் பட்சத்தில் அது இஸ்ரேலுக்கு ஹேப்பி செய்தியாக அமையும்.
முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி முதல் இன்று வரை இஸ்ரேல் – ஹமாஸ் மோதல், காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை உள்ளிட்டவற்றால் 45 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். குறிப்பாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தற்போது வரை காசாவில் 44,429 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதோடு ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் காசாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.